ஓவர் ஆட்டம் போட்ட ஆலியா மானசா.. விஜய் டிவி விட்ட சாபத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை

சன் டிவியில் துவங்கப்பட்ட புத்தம்புது சீரியலான இனியா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசாவிற்கு திடீரென்று விபத்து ஏற்பட்டு, கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆலியா காலில் பெரிய கட்டு போடப்பட்ட நிலையில் வீல்ச்சேறுடன் அவர் வெளியிட்டிருக்கும் உருக்கமான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

அதில் ஆலியா மானசா தன்னுடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் விரைவில் தனக்கு குணமாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என சோகத்துடன் பேசி இருக்கிறார். எப்போதுமே சோசியல் மீடியாவில் துருதுருன்னு இருக்கும் ஆலியா மானசா டான்ஸ் மாஸ்டர்களுடன் நடனமாடி ஓவர் அலப்பறை காட்டுவார்.

Also Read: ஆலியா சஞ்சய் தொடர்ந்து ஜோடி சேரும் அடுத்த சீரியல் பிரபலங்கள்.. காதலியால் விலகும் பாரதி!

இவரை சுமார் 4.2 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இவர் கார் டூர், ஃப்ரிட்ஜ் டூர் என ஏகப்பட்ட வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிடுவார். அதிலும் மனசா 2-வது பிரசவத்திற்காக ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகிய ஆலியா மானசா, அதன் பிறகு கடின உடற்பயிற்சியினால் உடல் எடையை குறைத்தார்.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ஆலியா மானசா, மீண்டும்ஜய் டிவி சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஆலியா மானசா ராஜா ராணி சீரியலில் உடன் நடித்த கதாநாயகன் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சஞ்சீவ் டிஆர்பி-யில் டாப் இடத்தில் இருக்கும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Also Read: 9 கிலோ எடை குறைத்து சந்தன கட்டையாக மாறிய ஆலியா மானசா.. ரகசியத்தை கேட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள்

ஆகையால் கணவர் முன்னணி சீரியல் நடிகராக வலம் வரும் சன் டிவி சீரியலுக்கு சென்றுவிடலாம் என விஜய் டிவிக்கு டாட்டா காட்டி விட்டார். அதன் பிறகு தான் ஆலியா மானசா சன் டிவியின் இனியா சீரியலில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. இனியா சீரியலும் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்து டிஆர்பி-யில் டாப் இடத்திற்கு சென்றது.

எலும்பு முறிவு ஏற்பட்ட ஆலியா மானசா புகைப்படம்

alya-manasa-accident
alya-manasa-accident

இதை கொண்டாடும் விதத்தில் அவர் தன்னுடைய கணவர் சஞ்சீவியுடன் துபாய் சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணினார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இப்படி தூக்கி விட்ட சேனலை மறந்து விட்டு ஓவர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஆலியா மனசாவிற்கு விஜய் டிவி வெட்ட சாபத்தால் வீல்ச்சேரி முடங்கி இருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Also Read: படிப்பை பாதியில் நிறுத்திய ஆலியா மானசா.. என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.?

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -