தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
டிஆர்பி-யில் சக்கைபோடு போட்ட அளவைகுண்டபுரம்லோ படத்தைத் தொடர்ந்து மேலும் சில அல்லு அர்ஜுன் படங்களை தமிழில் டப் செய்து வெளியிட சன் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இது ஒருபுறமிருக்க அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்ற படம் உருவாகி வருகிறது.
செம்மரக்கட்டை கடத்தல் கதைக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதில் இவருக்கு போலீஸ் வேடமாம்.
மேலும் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தை சஸ்பென்சாக வைத்துள்ளனர். முதன்முதலாக அல்லு அர்ஜுன் படம் 5 மொழிகளில் வெளியாவது இதுதான் முதல் முறை.
அந்த வகையில் புஷ்பா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 13-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் முற்றிலும் தன்னுடைய தோற்றத்தை மாற்றி நெகட்டிவ் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.