புரோமோஷன் பண்ணி நம்மள ஏமாத்திப்புட்டாங்க.. புஷ்பா படத்திற்கு வந்த சோதனை

ஒரு படம் வெளியாகும் முன்பே அந்த படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கில் படத்திற்கான புரோமோஷன்கள் செய்யப்படும். அதன் மூலம் அந்த படம் குறித்த ஆவலை ரசிகர்களுக்கிடையில் அதிகரிக்க செய்து படம் பார்க்க அனைவரையும் தியேட்டர் வரவழைத்து படத்தின் வசூலை அள்ளுவதே படக்குழுவினரின் நோக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் என்றால் அது புஷ்பா படம் தான். பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள், படத்தின் புரமோஷன்களை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற ஆசையில் இன்று திரையரங்கிற்கு சென்றுள்ளனர். ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்ததாம். காரணம் படம் நன்றாகவே இல்லையாம். முதல் பாதி தான் பார்க்கும்படி உள்ளதாம். இரண்டாம் பாதி பயங்கர மொக்கை என கூறுகிறார்கள்.

மேலும் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என ஆசையாக சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருவதால் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் தெலுங்கு நடிகர் என்பதால் தெலுங்கு ரசிகர்கள் தான் புஷ்பா படத்தை கொண்டாடி வருகின்றனர். மற்றபடி இதர மொழிகளில் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லையாம். மேலும் தமிழில் சமந்தாவின் பாடலை மட்டும் பார்த்துவிட்டு ரசிகர்கள் தியேட்டரில் இருந்து வந்து விட்டதாக கூறப்படுகிறது.

அப்போ தியேட்டருக்கு போன பாதி கூட்டம் சமந்தாவுக்காக தான் போயிருக்காங்க போல. ஒருவேளை சமந்தா இந்த படத்தில ஆடாம இருந்திருந்தா படத்தோட நிலைமை என்ன ஆகியிருக்கும்? படம் ஆஹா ஓஹோனு புகழ்ந்து தள்ளி பிரம்மாண்டமா பில்டப் குடுத்து இப்படி எங்களை ஏமாத்திட்டாங்களே என படம் பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்