குத்த வச்சு நச்சுனு போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த புது பட போஸ்டர்

அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் சந்தன கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தற்போது தெலுங்கு சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்தான் புஷ்பா. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது முதல் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தற்போது படக்குழுவினர் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் புகைப்படத்துடன் படத்தின் அப்டேட் வெளியிட்டு வருகின்றனர். தற்போது ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

rashmika mandanna
rashmika mandanna

தற்போது இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இப்படத்தை திரையரங்கில் காண்பதற்காக ரசிகர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அல்லு அர்ஜுன் இப்படத்தை பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் இப்படம் வெளிவரும்போது தெலுங்கில் எந்த படம் வெளிவராது எனவும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்