ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா வராதா?.. அஜித் எடுத்த விபரீத முடிவு

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அவருடைய ஏகே 62 படத்திற்கான எந்த அப்டேட்டுகளும் இன்று வரை சரியாக வரவில்லை. முதலில் இப்படத்தை இயக்குவது யார் என்று பெரிய பிரச்சினை இருந்த பொழுது அதற்கு தீர்வாக மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்பது உறுதியாக வெளிவந்தது. அதன் பின் அந்த படத்திற்கான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் அது குறித்து எந்த செய்தியும் இன்று வரை வெளிவராமல் தாமதமாகி இருக்கிறது.

இதற்கிடையில் ஏகே 62 படத்தின் கதையை ரெடி பண்ணுவதற்காக அஜித், இயக்குனருக்கு தனியாக ஒரு ஆபீஸை ஆரம்பித்து கொடுத்தார். இப்படி இருக்கையில் இதற்கான எந்த விஷயங்களும் சரியாக அமையாததால் அஜித் பொறுமையை இழந்ததால் வேர்ல்ட் டூரை தொடங்கிவிட்டார். இது அவர் ஏற்கனவே பிளான் பண்ணி வைத்திருந்தார் அதனால் மறுபடியும் போக ஆரம்பித்து விட்டார்.

Also read: எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான அஜித் படம்.. இன்று வரை அடையாளமாய் மாறிப்போன கதை

ஆனால் இவர் போகும்போது படத்திற்கு செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் நான் இந்த மாத இறுதியில் வந்து விடுவேன் என்று சொல்லி கிளம்பி விட்டார். அதே மாதிரி இயக்குனர் சைடும் கதைகள் எல்லாம் ஓரளவுக்கு ரெடியாக நிலையில் இப்படத்தின் டைட்டில் காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம், தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்பதால் அங்கே எலக்சன் வேலைகள் நடைபெறுவதால் அதில் மும்பரமாக வேலை பார்த்து வருகிறார். இருந்தாலும் அஜித்தின் பிறந்தநாள் அன்று படத்திற்கான முக்கிய அப்டேட்டுகள் வெளியிடுவதற்காக படக்குழுவினர் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

Also read: இந்த 5 மாஸ் ஹீரோகளுக்கு ஏத்த ஆளு இவங்க மட்டும் தான்.. ரஜினி, கமலுக்கு அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்கள்

அத்துடன் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளையும் தொடங்குவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள். அதனால் கூடிய விரைவில் இதற்கான அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக அஜித் பிறந்தநாள் அன்று அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஏகே62 படத்திற்கான டைட்டிலை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவ்வளவு பெரிய இடைவேளை இல்லாமல் இருந்திருந்தால் சூட்டோட சூட்டாக ஏகே 62 படத்தை பற்றி நாலா பக்கமும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் அஜித்தின் ரசிகர்களுக்கும் திருப்தியை கொடுத்திருக்கும். இப்பொழுது அஜித் ரசிகர்களுக்கு மே 1 அன்று டபுள் ட்ரீட்டாக இருக்கப்போகிறது.

Also read: AK62 மூச்சு பேச்சு காணும்.. இதுல அடுத்த படத்திற்காக 4 இயக்குனரிடம் கதை கேட்ட அஜித்

Next Story

- Advertisement -