அஜித் கேரியரில் இதுவரை நடக்காத பிரச்சனை.. வெற்றியோ, தோல்வியோ பயமுறுத்தும் 2 சம்பவங்கள்

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இவரின் அடுத்த படமான ஏகே 62 படத்தை ஒரு ப்ளாக் பஸ்டர் படமாக அமைய வேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறார். அதற்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக பார்த்து வருகிறார்.

அதற்காக முதலில் விக்னேஷ் சிவனிடம் இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் செய்த சில குளறுபடியினால் இவர் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது. அதனால் விக்னேஷ் சிவனிடம் இந்த வாய்ப்பைக் கொடுக்க வேண்டாம் என்று முடிவு பண்ணிவிட்டார். மேலும் அஜித், அதைவிட சிறப்பான இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாய் இருக்கிறார்.

Also read: அஜித்தை திருப்திபடுத்திய மகிழ்திருமேனி.. லைக்கா கொடுக்காததை கொடுத்து உதவிய ஏகே

பொதுவாகவே அஜித் இதுவரை நடித்த படங்களில் கதையை மட்டும் கேட்டுவிட்டு அதற்கு ஏற்ற மாதிரி நடித்து கொடுத்துவிட்டு சென்று விடுவார். ஆனால் சமீபத்தில் துணிவு படத்தின் மூலம் வெற்றியை பார்த்த அவர் அடுத்த படத்தை இது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று பெரிய ஆசையுடன் இருந்து வருகிறார்.

அதனால் அஜித் இதை மனதில் வைத்துக்கொண்டு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் பிரஷர் கொடுத்து வருகிறார். இதுவரை இந்த மாதிரியான ஒரு நிலையை அஜித் கொடுத்ததே இல்லை. ஆனால் இப்பொழுது ஏகே 62 படத்திற்காக இயக்குனரிடம் அதிகமான கண்டிஷனை வைத்திருக்கிறார்.

Also read: ஸ்காட்லாந்தில் இருந்து ஏகே 62-க்கு அப்டேட் கொடுத்த அஜித்.. விடாமல் துரத்தியதால் கூறிய பதில்

இந்த மாதிரியான பல மாற்றங்கள் அஜித்திடம் வந்துள்ளன. இதனால் படக்குழு, ஏகே 62 படத்திற்கான விஷயங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள். அதிலும் இயக்குனரிடம் இந்த படத்தில் ஆக்சன் சீக்வென்ஸ் அதிகமாக இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

இவர் இந்த மாதிரியான பிரஷர் எடுத்ததற்கு முக்கிய காரணமே விஜய் நடிக்கும் லியோவுக்கு சவால் விடும் விதமாக ஏகே 62 படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதுதான். ஏற்கனவே இவர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு படத்தை வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர்கள் அடுத்த படத்திலும் மோதுவதற்கு தயாராக இருந்து வருகிறார்கள். இதில் யாருக்கு வெற்றியோ, தோல்வியோ பெரிய சம்பவமாய் வர காத்திருக்கிறது.

Also read: தோல்வி பயத்தால் ஓவரா ஆழம் பார்க்கும் அஜித்.. மகிழ்திருமேனிக்கு போட்ட 3 கண்டிஷன்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்