ஸ்காட்லாந்தில் இருந்து ஏகே 62-க்கு அப்டேட் கொடுத்த அஜித்.. விடாமல் துரத்தியதால் கூறிய பதில்

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏகே 62 படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் இப்பொழுது ரிலாக்ஸ் வேணும் என்பதற்காக வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கே இருந்து அஜித் தனது புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் அஜித் தற்போது ஸ்காட்லாந்தில் தான் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டனர். அதனால் அங்குள்ள ரசிகர் ஒருவர் அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்காக எப்படியோ கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து விட்டனர். மேலும் அந்த ரசிகர் அஜித்திடம் பேசுவதற்கு முயற்சி செய்து இருக்கிறார்.

Also read: AK 62 விற்கு வரிசைக்கட்டி நிற்கும் 5 இயக்குனர்கள்.. ரீமேக் கேட்டதற்கு புதுசா பண்ணுவோம் என கூறிய பழைய ஜாம்பவான்

அப்பொழுது அஜித் ஒரு காபி ஷாப்பில் கேஷுவலாக தனியாக இருந்திருக்கிறார். மேலும் அஜித், ரசிகர்கள் பேச முயற்சிப்பதை தெரிந்து கொண்டு அவர்களை கூப்பிட்டு பேசி இருக்கிறார். அப்பொழுது அங்கிருந்த ரசிகர்கள் தயக்கத்துடன் ஏகே 62 படத்தின் அப்டேட் பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்திருக்கிறார்.

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அஜித் தற்போது எனக்கு கொஞ்சம் பிரேக் வேணும்பா என்று கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து அஜித், படத்தைப் பற்றி பேசாமல் ரசிகர்களிடம் சாதாரணமாக பேசிவிட்டு போட்டோ எடுத்து அனுப்பிவிட்டு இருக்கிறார். இதனை அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Also read: AK 62 படத்தின் இயக்குனர் இவர்தானாம்.. அப்போ அஜித்திற்கு ஹீரோயினும் ரெடின்னு சொல்லுங்க

ஆனால் அஜித் கொஞ்சம் பிரேக் வேணும் என்று சொன்னது, அப்படின்னா இப்போதைக்கு ஏகே 62 படம் ஆரம்பிக்காது என்று தான் அர்த்தமாகிறது. இதற்கு காரணம் விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் செய்த குளறுபடிகள் தான். இதனால் கடுப்பாகி போன அஜித் வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

பின்பு அடுத்தபடியாக ஏகே 62 படத்தின் இயக்குனர் தொடர்ந்து மாற்றப்பட்டு இறுதியாக மகிழ் திருமேனி உறுதி செய்யப்பட்டார். மேலும் ஏகே 62 படப்பிடிப்பு ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து வந்த குழப்பத்தினால் தான் இப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப் போவதாக தெரிகிறது.

Also read: AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்