ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித்.. ஹாட்ரிக் வெற்றிக்கு அடி போடும் நடிகர்!

தல அஜித்தின் வலிமை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அடுத்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என படக்குழு தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. இதனால் வினோத்-அஜித்-போனிகபூர் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் ஏகே 61 திரைப்படத்தை வங்கிக் கொள்ளையை மையமாகக்கொண்டு ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஒன்றரை மாதம் நடைபெற்றது.

இந்த படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கட்டுக்கதையை கட்டிவிட்டனர். ஆனால் இது எல்லாம் ஒருபக்கம் இருக்க இப்போது அஜித் லண்டன், ஐரோப்பா என பைக் ட்ரிப் சென்றிருக்கிறார்.

அங்கே எடுத்திருக்கும் போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. ஐரோப்பா ட்ரிப் முடிந்தவுடன் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மீதம் இருக்கும் ஒரு சில காட்சிகளை நடிக்கப் போவதாகவும், அதன் பிறகு டப்பிங் வேலைகள் துவங்க போவதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து, செப்டம்பர் மாதத்தில் போஸ்ட் புரோமோஷன் வேலை நடைபெறவுள்ளது. இதனால் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவராது என ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஜூலை மாதத்தில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும். அதன் பிறகு டிசம்பர் 8 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்த நிலையில் எதற்காக ரிலீசை தள்ளி வைக்கின்றனர் என்பது தான் தெரியவில்லை. தல அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்பதைத் தெரிந்த அவருடைய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால் இப்பொழுது அஜித் படம் பின்வாங்கியதால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளி வரவிருக்கிறது.

அதனால் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு செம லக் அடித்துவிட்டது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் டாக்டர், டான் படத்தின் மூலம் 100 கோடி வசூலை குவித்து சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கும் நிலையில், தீபாவளிக்கு ரிலீஸாகும் அவருடைய பிரின்ஸ் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறார்.

- Advertisement -

Trending News