4 மாதங்கள் கெடு கொடுத்த அஜித்.. செய்வதறியாமல் முழிக்கும் இயக்குனர்

அஜித்தின் துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன், அஜித், லைக்கா கூட்டணியில் இந்த படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவன் கதை அஜித்துக்கு
பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு சில இயக்குனர்களிடம் அஜித் மற்றும் லைக்காக கதை கேட்டு வந்த நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனியின் கதை அவர்களுக்கு பிடித்துள்ளதாம். ஆகையால் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கும் என்று அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : லண்டனில் இருந்து வெளிவரும் ஏகே-62 அப்டேட்.. லியோவால் பதுங்கிய அஜித் பாயும் நேரம் இது

இந்நிலையில் லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் அஜித் இருவருமே லண்டனில் உள்ளனர். ஆகையால் மகிழ் திருமேனி வீடியோ கால் மூலம் தினமும் அஜித்திடம் பேசி வருகிறாராம். கதை குறித்து பல விஷயங்களை விவாதித்து வருகிறார்களாம்.

ஆனால் தற்போது மகிழ்த்திருமேனிக்கு அஜித் ஒரு செக் வைத்துள்ளார். அதாவது எனக்கு ஓய்வு வேண்டும் அதனால் ஏகே 62 படத்தை வெகு விரைவில் முடிக்க மகிழ்ச்சிறுமேனிக்கு கட்டளையிட்டுள்ளார். இப்படத்தின் சூட்டிங் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முடித்து விட வேண்டும் என அஜித் கூறியுள்ளாராம்.

Also Read : தளபதி கைவிட்டதால் அஜித்தை தட்டி தூக்கிய மகிழ் திருமேனி.. அதிர்ஷ்டம் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகுது

இவ்வாறு அஜித் மகிழ்திருமேனிக்கு 4 மாத கெடு கொடுத்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் முழித்து வருகிறாராம். ஏனென்றால் இப்போது தான் மகிழ்ந்திருமேனி, அஜித் கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆகையால் கதை மட்டுமே மகிழ்திருமேனி தற்போது தயார் செய்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து படத்திற்கு நிறைய வேலை செய்ய வேண்டி உள்ளது. மேலும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யவே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகும். இப்படி இருக்கும் சூழலில் நான்கு மாதங்களில் எப்படி படத்தை முடிப்பது என்ற யோசனையில் மகிழ்திருமேனி உள்ளாராம்.

Also Read : மகிழ் திருமேனி இயக்கிய 5 சிறந்த படங்கள்.. அஜித்தை இம்ப்ரஸ் செய்த அந்த 2 படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்