ஒருவழியா தரிசனம் கொடுத்த அஜித்.. வெளியானது விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Ajith-Vidaamuyarchi: மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கடந்த நிலையிலும் படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் நொந்து போனார்கள்.

vidaamuyarchi
vidaamuyarchi

ஷூட்டிங் ஆரம்பிப்பதும் பிரேக் விடுவதும் என இருந்த பட குழு அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ, போட்டோக்களை வெளியிட்டனர். இருந்தாலும் படம் எப்போதும் முடியும்? ரிலீஸ் எப்போ? என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

இந்த கேப்பில் அஜித்துக்கும் லைக்கா தரப்புக்கும் சிறு பிரச்சனை என்று கூட பேசப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் குட் பேட் அக்லி பட அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்களும் வெளியானது.

விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் இன்று மாலை விடாமுயற்சி அப்டேட் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித் ஒரு வழியாக தரிசனம் கொடுத்து விட்டார்.

அதன்படி முயற்சி திருவினையாக்கும் என்ற அறிவிப்போடு லைக்கா போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. அதில் அஜித் கருப்பு நிற உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு கையில் ஒரு பேக் உடன் எங்கோ செல்வது போல் இருக்கிறார்.

மேலும் அந்த போஸ்டரில் அவர் பாதையில் என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் இன்றி அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. அதேபோல் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கி இருக்கிறது.

ஆடியோ உரிமம் சோனி மியூசிக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. ஆனாலும் படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீசுக்கு தயாராகும் விடாமுயற்சி

Next Story

- Advertisement -