விடாமுயற்சிக்கு பின் வேறொரு அஜித்தை பார்க்கப் போறோம்.. 2024ல் ஏற்படும் அதிரடியான மாற்றம்

Ajith Took The iImportant Decision: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித், தற்போது துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து துபாயில் துவங்கி இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே அஜித் சினிமாவில் நடிப்பதற்கு பெருசா எந்த ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. 2024-லிருந்து அஜித் இனிமேல் முன்னாடி மாதிரி படம் பண்ண போறது இல்லையாம், எல்லாத்தையும் சேஞ்ச் பண்றாராம். அஜித் ஒரு படத்தில் நடித்தால் மீண்டும் அதே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனால் அவருடைய ரசிகர்களும் சலிப்படைந்தனர். இதன் விளைவாகத் தான் இப்போது அஜித் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதனால் 2024ல் இருந்து இனிமேல் ஒரு தயாரிப்பாளருக்கு ஒரு படம் தான் எனவும், ஒரு டைரக்டருடன் ஒரு படம் மட்டுமே பண்ணுவேன் என்ற முடிவை ஆணித்தரமாக எடுத்திருக்கிறார்.

Also read: விஜய் பட இயக்குனரா வேண்டவே வேண்டாம்.. அஜித் ரிஜெக்ட் செய்து, சூப்பர் ஹிட் அடித்த படம்

அதிரடி முடிவெடுத்த அஜித்

அதேபோல் முன்பு சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்லாத மாதிரி இருந்த அஜித், இப்போது முற்றிலும் எல்லாத்தையும் மாற்றிவிட்டு நடிப்பதில் முழு ஆர்வம் காட்டப் போகிறார். அதேசமயம் விஜய்யும் அரசியலில் ஆர்வம் காட்டுவதால் தளபதி 68 படத்தில் முடித்துவிட்டு, இரண்டு வருடம் முழு நேர அரசியவாதியாக மாறப் போகிறார்.

இந்த சமயத்தை அஜித் சரியாக பயன்படுத்திக் கொண்டு கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டப் போகிறார். இந்த விஷயத்தை அறிந்த அஜித் ரசிகர்களும் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். அடுத்த வருடத்தில் இருந்து ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு, மூன்று படங்களை ரிலீஸ் செய்யும் முடிவில் அஜித் இருக்கிறார்.

Also read: விடாமுயற்சிக்கு ஆட்டம் காட்டிய 5 முக்கிய காரணங்கள்.. கும்பிடு போட்ட அஜித்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை