விஜய் பட இயக்குனரா வேண்டவே வேண்டாம்.. அஜித் ரிஜெக்ட் செய்து, சூப்பர் ஹிட் அடித்த படம்

Ajith – Vijay: ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் ஆஸ்தான இயக்குனர்கள் என்று ஒருவர் இருப்பார்கள். இயக்குனரின் பெயரை சொன்னாலே அவர் எந்த நடிகரின் படங்களை இயக்குவார் என்று சொல்லும் அளவுக்கு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் கோலிவுட்டில் எதிர் துருவங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்திற்கு ஆஸ்தான இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் கூட அட்லி, லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் விஜய் படங்களை மட்டும் தான் இயக்குவார்கள். அதே போன்று அஜித் என்றால் அவருக்கு ஆஸ்தான இயக்குனர் எச் வினோத் என்று இருக்கிறார்கள். இதேபோன்றுதான் இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து இயக்குனர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு தருணத்தில் அஜித் விஜய் பட இயக்குனர் என ஒரு இயக்குனரை அஜித் ரிஜெக்ட் செய்ய நினைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

Also Read:ரஜினி, கமல் தான் இத பண்ணுவாங்களா.? பேராசையில் அஜித்தை தூதுவிடப் போகும் விஜய்

சில வருடங்களுக்கு முன்பு அஜித் தானாக முன்வந்து ஏவிஎம் ப்ரொடக்ஷனுக்கு படம் பண்ணுவதாக சொல்லி இருக்கிறார். மேலும் இயக்குனர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார். ஏவிஎம்முக்கு அஜித் போன்ற முன்னணி ஹீரோ தாமாக முன்வந்து படம் பண்ண சம்மதம் தெரிவித்தது பெரிய சந்தோஷமான விஷயமாக இருந்திருக்கிறது.

விஜய் பட இயக்குனரை ரிஜெக்ட் செய்ய நினைத்த அஜித்

இயக்குனர் யார் என்று தேர்வு செய்வதில் பெரிய குழப்பமே இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் கமர்சியல் இயக்குனர் என்றால் அது பேரரசு தான். தளபதி விஜய் நடிப்பில் திருப்பாச்சி என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்திருந்தார். அஜித்திடம் பேரரசு தான் இயக்குனர் என்று சொன்னதும், விஜய் பட இயக்குனர் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் ஒரு வழியாக அஜித்திடம் பேசி பேரரசு உடன் படம் பண்ண சம்மதம் வாங்கி இருக்கிறார்கள். பேரரசு சொன்ன கதை கமர்சியல் ஆக்சன் படம். அஜித் அந்த சமயத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க இருந்ததால் உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார். இந்த உடலமைப்புடன் எப்படி ஆக்சன் படத்தின் நடிப்பது என ரொம்பவும் தயங்கி இருக்கிறார் அஜித்.

அதைத்தொடர்ந்து பேரரசு மற்றும் அஜித் கூட்டணியில் உருவான படம் தான் திருப்பதி. இந்த படம் கிட்டத்தட்ட 175 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. திருப்பாச்சியை விட இந்த படம் பெரிய ஹிட் அடித்ததாக இயக்குனர் பேரரசு தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Also Read:ஆதிக் மடியில் விழுந்த ஏகே 63 பட வாய்ப்பு.. அஜித் நண்பர் கொடுத்த சர்டிபிகேட்