சூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கும் அஜித்.. அதிகாலை 2,3 மணிக்கு ஏற்படும் சங்கடம்

அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் அடுத்த படமான AK 61 படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் அஜித், AK 61 படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ஒரு கெட்டப்பிற்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்த நிலையில், இன்னொரு கெட்டப்பிற்கு இடைவெளி எடுத்தார்.

அந்த நாட்களில் ஐரோப்பாவில் பைக் ரேட் செய்துக்கொண்டிருந்த அஜித்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. தற்சமயம் கூட ஈபில் டவர் முன் அஜித் நின்ற ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்நிலையில் அஜித் சென்னையில் ஷூட்டிங் நடத்தப்படுவதால் சிறிது சங்கடத்தில் இருக்கிறாராம். அஜித் கலந்து கொள்ளும் படத்தின் ஷூட்டிங்கின்போது, சூட்டிங் முடிந்த பின்பு வீட்டிற்கு கிளம்பும் அஜித் வாகனத்தின் பின்னாடியே அவருடைய தீவிர ரசிகர்கள் மோட்டார் பைக்கில் துரத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதனால் பைக் ஓட்டும் போதே செல்பி எடுக்கும் ரசிகர்களை பலமுறை அஜித் கண்டித்தாலும், அவர் மீது இருக்கும் பிரியத்தில் தல அஜித் ரசிகர்கள் அதை தொடர்ந்து செய்வதால் பெரும் சங்கடத்தில் இருக்கிறார்.

இந்த சம்பவம் எல்லாம் அதிகாலை 2 மணி 3 மணி என கால நேரம் பார்க்காமல் நடக்கிறதாம். இப்படி அபாயகரமாக பைக் ஓட்டுவது ரசிகர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஜித் படப்பிடிப்பு முடிந்தபின் வீட்டிற்கு செல்ல தயங்குகிறார்.

இதனாலேயே இவர் வலிமை சூட்டிங் நேரத்தில் கோகுலம் ஸ்டுடியோவில் 20 நாள் தங்கி விட்டாராம். அதேபோன்று தற்போது AK 61 படத்தின் படப்பிடிப்பு நடக்கும் வரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தங்கிவிட வேண்டும் என அஜித் முடிவெடுத்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்