திறமை இருந்தும் வாய்ப்பு கொடுக்க தயங்கும் அஜித், ரஜினி, கமல்.. பெரும் ஏக்கத்தில் சகலகலா நடிகை

சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்கள் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து விடும் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த வாய்ப்பு கிடைக்காமல் திணறுகின்றனர். இதனால் இவர்கள் தங்களுடைய நடிப்பை ஏதாவது ஒரு ரூபத்தில் திரையில் ரசிகர்களுக்கு காண்பித்து விட வேண்டும் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடித்து அசத்துகின்றனர்.

அப்படித்தான் சமீபகாலமாக நடிகை ஒருவர் இல்லாமல் எந்த  தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகுவதில்லை. அப்படி இருக்கும் செம கேரக்டர் ஆர்டிஸ்ட் இன்று வரை ரஜினி, கமல், அஜித் படங்களில் நடித்ததே இல்லையாம். இவர் விஜய்யுடன் கூட கடைசியாக நடித்த படம் ஜில்லா தானாம். 

Also Read: படம் சரியா ஓடலைனா கமல், ரஜினியின் ரியாக்ஷன் இதுதான்.. அவரை தலையில் தூக்கி கொண்டாட இதான் காரணம்

நடிகை வினோதினி வைத்தியநாதன் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் போலீசாக நடித்ததில் இருந்து இன்று வரை பல படங்களில் கேரக்டர்கள் ரோலில் அசத்தக்கூடியவர். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு முன்பே 2009 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிபுரம் அதைத்தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கடல், அப்பா, ஆண்டவன் கட்டளை, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் சகலகலா நடிகையாக நடித்து அசத்தி இருக்கிறார்.

அதிலும் ஆண்டவன் கட்டளை படத்தில் உதவி வழக்கறிஞராக நடித்து சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விகடன்  விருதையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு அஜித், கமல், ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என பலமுறை முயற்சி செய்திருக்கிறார்.

Also Read: எச்சி கிளாஸ் கழுவி தான் இந்த நிலைமைக்கு வந்தேன்.. மேடையில் எமோஷனலாக பேசிய விஜய்யின் ஹிட் பட இயக்குனர்

ஆனால் அவருக்கு  ஏனோ வாய்ப்புகள் அமைவதில்லை. என்ன செய்தால் அவர்களது படத்தில் நடிக்க அழைப்பார்கள் என்றும் தெரியாமல் தவிக்கிறார். ஆனால் இவருக்கு பல படங்களில் டாப் ஹீரோக்களின் அம்மாவாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதாம்.

ஆனால் என்றைக்குமே ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றும் உறுதியாக இருக்கிறார். இதைப் பற்றி வினோதினி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு நிச்சயம் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Also Read: தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

Next Story

- Advertisement -