அஜித் நடிப்பில் வெளியான ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி . இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வெற்றி பெறாததால் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.
இப்படத்தின் தோல்வியால் அடுத்தடுத்து தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் போனதால் தெலுங்கு மற்றும் ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.
மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
அதன் பிறகு இவருக்கு திருமணம் நடந்து முடிந்தால் சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது கன்னட மொழியில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
2021 ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு கன்னட மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வெற்றி கொடுத்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ் சினிமாவில் கூட நடிக்க வந்து விடுவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.