அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. ஆனால் அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், புனே உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.
அடுத்தது தளபதியின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் தளபதியின் 63-வது படத்தை யார் இயக்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள தல ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், சீனு ராமசாமி அந்த வாய்ப்பை பெற துடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீனுராமசாமி பல வருடமாக சினிமாவில் இருக்கிறார். பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கி உள்ளார். ஆனால் தற்போது அஜித்திற்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும், இந்த கதை அஜித்திற்கு கண்டிப்பாக பிடிக்கும் பெரிய அளவில் வெற்றிபெறும் என கூறிவருகின்றனர்.
தற்போது அஜித்தின் ஏகே 61 படத்திற்காக அஜித் ஸ்லிம்மாகவும், ஸ்டைலிஷ் ஆக மாறி இருக்கிறார். ஏகே 61 படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார்.
அஜித் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 52 நாட்கள் கால்ஷீட் கொடுத்து அவருடைய பங்களிப்பை முடித்துவிட்டார். ஆனாலும் இந்தப் படத்தில் அஜித்துக்கு இன்னொரு கெட்டப் இருக்கிறதாம். அந்த கெட்டப் போடுவதற்கு சிறிய இடைவெளி வேண்டும் என்பதற்காக மன நிம்மதி தேடி ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைட் செய்துகொண்டிருக்கிறார்.
கூடிய விரைவில் அஜித் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது காலதாமதம் ஆவதால் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இந்தப் படத்திற்குப் பிறகு சீனு ராமசாமியின் கதையை அஜித் கேட்டு, அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வாரா என சீனு ராமசாமி போலவே அவருடைய ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.