சினிமா வாய்ப்பு இல்லாததால் சீரியலில் களமிறங்கி முன்னணி நடிகைகள் கலக்கிய தான் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்த கனிகா சன் டிவியின் முக்கியமான சீரியலில் களம் இறங்க உள்ளார்.
கோலங்கள் இயக்கிய திருச்செல்வம் இந்த புதிய சீரியலிலும் இயக்க உள்ளாராம். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீரியலின் மூலம் சன் டிவியின் டிஆர்பி எதிர்பார்த்த படி உயருமாம் ஏனென்றால் கோலங்கள் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கனிகா ஆட்டோகிராப் மற்றும் வரலாறு போன்ற படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் ஒரு நல்ல பெயரை வாங்கியுள்ளார். இந்த சீரியல் ரீஎன்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், முன்னணி நடிகைகள் இதுபோன்ற சீரியல்களின் மூலம் வாய்ப்பை தேடிக் கொள்கின்றனர்.
இதற்கு முன் கனிகா தங்கவேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.