மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட அஜித்.. அப்பாடி மொத்த கண்டத்தில் இருந்தும் தப்பித்த மகிழ்திருமேனி

ஏகே 62 கொடுத்த டார்ச்சரில் அஜித் வேர்ல்ட் டூரையே தள்ளி வைத்து விட்டார். ஏனென்றால் விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு லியோ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் துணிவு படத்திற்கு பிறகு இன்னும் கதை கூட தயாராகாமல் இருக்கும் ஏகே 62 படத்தை நினைத்து தல ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் இருந்தனர்.

ஆனால் இப்போது ஏகே 62 படத்திற்கு மொத்தத்தையும் அஜித் லிஸ்ட் போட்டுவிட்டார். இதனால் மகிழ்திருமேனியும் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துள்ளார். ஏனென்றால் முதலில் மகிழ்திருமேனி கதையும் ஆப்ஷனில் தான் இருந்தது. அதன்பின் கொடுத்த டேட்டிற்கு ஏதாவது படம் எடுத்தே ஆக வேண்டும் என ஒரு கொரியன் படத்தில் ரீமேக் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டது.

Also Read: ஏகே-62 வாய்ப்பு பறிபோக அஜித் காரணம் இல்ல.. முதல் முறையாக உண்மையை உளறிய விக்னேஷ் சிவன்

ஏகே 62 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, ஏற்கனவே பெரிய ஹிட் ஆன கொரியன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்தது. பேசாமல் அதை அஜித்தை வைத்து எடுத்துவிடலாம் என்று மகிழ்திருமேனியின் கதையை நிராகரித்தது. ஆனால் கொரியன் படத்தின் கதையும் திருப்தி அடையாத அஜித், கடைசியில் மகிழ்திருமேனி கதையில் சில சேஞ்சஸ் சொல்லி ரெடி பண்ண ஒத்துக்கொண்டார்.

அப்படி என்றால் அஜித்திடம் இருந்து வரவேண்டிய ஃபீட்பேக் எல்லாம் வந்துவிட்டது. அஜித்தை பொருத்தவரைக்கும் ஒரு விஷயம் சினிமாவில் சொல்கிறார்கள். அவர் பேசி முடித்து விட்டால் அவ்வளவுதான். இனிமேல் வாயை திறக்க மாட்டார், எதிலையுமே தலையிட மாட்டார். முதலிலேயே எல்லாவற்றையும் ஒரு பேச்சாக முடித்து விடுவார்.

Also Read: AK62 மூச்சு பேச்சு காணும்.. இதுல அடுத்த படத்திற்காக 4 இயக்குனரிடம் கதை கேட்ட அஜித்

அஜித்திடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டால் நேராக பூசணிக்காய் உடைத்து விட வேண்டியது தான் என்று கூட சொல்வார்களாம். கடைசியாக அஜித் தன்னுடைய கதையை தான் ஓகே சொன்னதால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் மகிழ்திருமேனி, அஜித் சொன்ன கரெக்சன் எல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறார். நிச்சயம் இந்த படம் அவருடைய கேரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.

ஆகையால் இனி வரும் நாட்களில் ஏகே 62 படத்தை குறித்த அப்டேட் வரிசையாக வர துவங்கும். அதே சமயம் முதல் கட்ட படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் அறக்கப் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. அதை போல் படத்தின் கதைக்கு ஏற்ப மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: விக்னேஷ் சிவனை மிஞ்சிய மகிழ் திருமேனி.. ஏகே 62-வுக்காக தூசி தட்டிய சூப்பர் ஹிட் படம்

Next Story

- Advertisement -