5 மொழி தெரிந்தும் பான்-இந்தியா படங்களில் நடிக்காத அஜித்.. இதுல இப்படி ஒரு ரகசியம் இருக்கா!

சமீபகாலமாகவே இந்திய சினிமாவில் பான் இந்தியா படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய நடிகர்கள் பலரும் பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதோடு இதுபோன்ற படங்களில் நடிக்கவே அதிக விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கு அனைத்து மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதுதவிர தமிழிலும் ஒரு சில பான் இந்தியா படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படங்களில் அதிக லாபம் இருந்தாலும் நிறைய சிக்கல்கள் உள்ளது.

உதாரணமாக தமிழ் நடிகர்கள் பான் இந்தியா படங்களில் நடிக்கும்போது, தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பேச மிகவும் சிரமப்படுகிறார்கள். இருப்பினும் பான் இந்தியா படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் இந்த படங்களில் சிரமம் பார்க்காமல் நடிக்கிறார்கள்.

ஆனால் தமிழில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்திற்கு அனைத்து மொழிகளும் அத்துப்படி. இவர் நினைத்தால் மிகவும் ஈஸியாக பான் இந்தியா படங்களில் நடிக்கலாம். ஆனால் அஜித் தமிழ் தவிர பிற மொழி படங்களில் கவனம் செலுத்தாமல் தவிர்த்து வருகிறார். மொழி தெரிந்தும் அஜித் பான் இந்தியா படங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.

பான் இந்தியா படங்கள் எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. நாம் ஒரு மொழியில் படம் எடுத்தால் அந்த மொழி ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தினால் போதும். ஆனால் பான் இந்தியா படம் அப்படி அல்ல அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக கதை இருக்க வேண்டும். அந்தந்த மாநில கலாச்சாரத்திற்கு ஏற்ப கதையில் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும்.

பான் இந்தியா படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு சொதப்பல் இருந்தாலும் மொத்தமாக படம் பிளாப் ஆகிவிடும். எனவேதான் தேவையில்லாமல் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று கூட அஜித் பான் இந்தியா படங்களை தவிர்த்து வரலாம் என கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்