இந்தியாவைப் பொருத்தவரை பரதக் கலைக்கு என்றே தனி மரியாதை உள்ளது. சமீப காலமாக இந்த கலையை பற்றி ஒரு சிலர் தவறான முறையில் சித்தரித்து படங்கள் மற்றும் கருத்துக்கள் வெளிவருவதால் பாரத கலைக்கான மரியாதை சற்று குறைந்து வருவதாக வருத்தத்துடன் இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்
அதாவது 30 ஆண்டுகாலமாக நடன இயக்குனராக பணியாற்றியவர் பீ கே முத்து. இவர் கிட்டத்தட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவாஜிகணேசனுக்கு நடன இயக்குனர் பீகே முத்து பரதக்கலை கற்றுக் கொடுத்துள்ளார். இவரது மகனான கே ஸ்ரீராம் பரதக் கலையின் பெருமையையும் படத்தில் தவறாக சித்தரிப்பதை பற்றி கூறியுள்ளார்.
பரதக் கலையை கற்றுக் கொண்டாலே பெண்ணின் தன்மை வந்துவிடும் என பலரும் நினைத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களிலும் பரதக் கலையை தவறான முறையில் தான் சித்தரித்து வருகின்றனர்.
அதாவது வரலாறு படத்தில் அஜித் பாரத கலைஞராக நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் பரதக்கலை கற்றுக் கொண்டதால் அஜித் பெண் தன்மை இருப்பதாக படத்தில் சித்தரித்து. இதனால் இவருக்கு திருமணம் ஆகாதது போல் படத்தில் காட்டியிருப்பார்கள்.
அதேபோல் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் பரத கலைஞராக நடித்திருப்பார். இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டாலும் இப்படத்தில் பரத கலைஞராக கமலஹாசன்யிருப்பதால் மனைவி அவரை வெறுத்து ஒதுக்குவார். இந்த மாதிரி ஒரு சிலர் தவறான கருத்துக்களை முன்வைத்து பரதக் கலையை படத்தில் சித்தரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விஷயத்தில் நடிகர் அஜித் மற்றும் கமல்ஹாசன் உச்ச நட்சத்திரமாக இருந்து பரதக்கலை துரோகம் செய்துள்ளதாக கே ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். ஆனால் பரதக்கலை ஒரு அற்புதமான கலை என்றும் அதனை கற்றுக் கொள்வது அனைவருக்கும் நல்லது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தியை சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.