அஜித் பிரம்மாண்டத்தின் உச்சம் தொட வரிசை கட்டி நிற்கும் 3 இயக்குனர்கள்.. எதிர்பார்ப்பை எகிற செய்த ஏகே 63

அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்க போகிறார் என்ற மிகப்பெரிய வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஏகே 63 படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் பெரும் நாயகனாக விஜய் பார்க்கப்பட்டார். அவருக்கு தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பட்டமும் உள்ளது.

ஆனால் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக மோதிக் கொண்டது. இதில் வாரிசை பின்னுக்கு தள்ளி முதல் நாள் கலெக்ஷனில் வசூலை வாரி குவித்தது துணிவு. இதன் மூலம் அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது.

Also Read : விக்னேஷ் சிவனை டீலில் விட்ட அஜித்.. உதயநிதி இயக்குனருடன் கைகோர்க்கும் ஏகே-62 காம்போ

அதாவது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவனை ஓரம் கட்டி வேறு ஒரு இயக்குனரை லைக்கா தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியானது. ஏ கே 63 படத்தையும் லைக்கா தான் தயாரிக்க உள்ளதாக உறுதி பட தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் நம்பர் ஒன் பட்ஜெட் படமாக ஏகே 63 உருவாக இருக்கிறது. அதாவது இதுவரை இந்திய சினிமாவில் வெளியான படங்களில் அதிக செலவில் எடுக்கப்படும் படமாக இந்தப் படம் அமைய உள்ளது. ஆகையால் இதற்கான இயக்குனர்களை தற்போது லைக்கா தேடி வருகிறதாம்.

Also Read : விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவி போன AK-62.. அஜித்தின் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு தரும் லைக்கா

பிரம்மாண்ட பட்ஜெட் என்றாலே நமக்கு சற்றென்று ஞாபகம் வருவது ராஜமௌலி, ஷங்கர் மற்றும் பிரசாந்த் நீல் தான். இவர்களால் தான் இந்த படத்தின் பட்ஜெட்டை நியாயப்படுத்த முடியும். ஏனென்றால் இதற்கு முன்பு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஆன பாகுபலி, எந்திரன், கே ஜி எஃப் போன்ற படங்களை இயக்கியவர்கள் இவர்கள்தான்.

அந்தப் படங்களும் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியைத் தந்து வசூலை வாரி கொடுத்தது. ஆகையால் லைக்கா இவர்களுள் ஒருவரை தான் தேர்ந்தெடுக்க உள்ளதாம். ஆனால் இந்த மூன்று இயக்குனர்களுமே தற்போது படங்களில் பிசியாக உள்ளனர். இதற்கு முன்னதாக ஏகே 62 படத்தின் இயக்குனர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Also Read : லோகேஷ் LCUவில் AK?. ஒரே படத்தில் மோத போகும் அஜித், விஜய்

Next Story

- Advertisement -