மீனாவின் அம்மாவால் அவமானப்படுத்தப்பட்ட அஜித்.. பெரிய மனுஷன் என நிரூபித்த AK

அஜித் தற்போது ஒரு மாஸ் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் சினிமாவுக்கு வந்த புதிதில் ஆரம்பத்தில் அஜித் பட்ட அவமானங்கள் ஏராளம். அந்த அவமானங்களை ஏற்றுக் கொண்டு தன்னைத்தானே செதுக்கி இப்போது ஒரு அடையாளமாக வந்து நிற்கிறார் அஜித்.

இந்நிலையில் தன்னை தேடி யார் உதவி என்று கேட்டு வந்தாலும் அஜித் உடனே உதவக்கூடியவர். இப்போது அவரின் துணிவு படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த சூழலில் அஜித் நடிகை மீனாவின் அம்மாவால் அவமானப்படுத்தப்பட்ட விஷயத்தை பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூபில் பகிர்ந்து உள்ளார்.

Also Read : 23 வருடங்களுக்குப் பிறகு அஜித் படத்தில் இணையும் நடிகை.. பெருமூச்சு விட்ட விக்னேஷ் சிவன்

அதாவது ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அஜித், மீனா இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் அஜித்தை காட்டிலும் மீனாவிற்கு தான் மார்க்கெட் அதிகம். மேலும் ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்ததற்காக அப்போது ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

அந்த விருதினை மீனா தான் அஜித்துக்கு கொடுத்துள்ளார். அப்போது தொகுப்பாளர் அந்த விழா மேடையில் மீனா மற்றும் அஜித்தை நடனம் ஆடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதைக் கேட்டவுடன் கீழே அமர்ந்திருந்த மீனாவின் அம்மா உடனே மேடைக்கு ஏறி தன்னுடைய மகள் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்கள் நடித்துள்ளார்.

Also Read : வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

இப்போது இவருடன் போய் நடனம் ஆட வேண்டுமா என அங்கிருந்து மீனாவை அழைத்துச் சென்று விட்டாராம். ஒரு மிகப்பெரிய மேடையில் நடிகையின் அம்மாவால் அஜித்துக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. ஆனால் அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக் கொள்ளாத அஜித் மீனாவிற்கு உதவி செய்துள்ளார்.

அதாவது அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் மீனா தான் நடிக்க வேண்டும் என ஏகே கேட்டுக்கொண்டாராம். அதனால் தான் அந்த படத்தில் மீனாவுக்கு வாய்ப்பு கிடைத்ததாம். இதே போல் வேறு எந்த நடிகருக்கு அவமானம் நடந்திருந்தால் அந்த நடிகையின் நிலைமையே வேறு. ஆனால் அஜித் பெரிய மனுஷன் என்பதை இந்த சம்பவம் மூலம் நிரூபித்துள்ளார்.

Also Read : 5 நாட்களில் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரிப்போர்ட்.. ஆட்ட நாயகனாக நிரூபித்த அஜித்

Next Story

- Advertisement -