பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த அஜித்.. விடாமுயற்சிக்கு இருந்த பிரச்சினை அனைத்தும் சரி செய்த ஏகே

Actor Ajith in Vidamuyarchi: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எப்பொழுது அவருடைய விடாமுயற்சி படம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் அதற்கு பிள்ளையார் சுழி கூட போடவில்லை என்பது இவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு என்னதான் பிரச்சனை என்று தெரியாமல் மாத கணக்கில் இழுத்தடித்துக் கொண்டு இருந்த நிலையில் இன்றுவரை படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிக அளவில் வெறுத்துப் போய்விட்டனர். ஏனென்றால் இது குறித்து எந்தவித அப்டேட்களும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால் தான்.

Also read: 23 வருடங்கள் ஆகியும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்.. கேரளாவின் வசூல் மன்னனாக வரும் தளபதி

ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் இப்படத்தின் தயாரிப்பாளரான லைக்காவிற்கு வந்த பண நெருக்கடியால் தான் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. ஏனென்றால் அவர்கள் வருமான வரி சோதனையால் யாருக்கும் பணம் கொடுக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள்.

ஏற்கனவே லைக்கா, அஜித் விக்னேஷ் சிவன் வைத்து தொடங்கும் பொழுது ஓ டி டி சேட்டிலைட் போன்றவைகளை விற்று விட்டார். தற்போது இந்த தொகையை கூடுதலாக வாங்கவும் முடியாமல் குறைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கிறார்.

Also read: அஜித் மீது நம்பிக்கை இல்லாத இயக்குனர்.. ஏ கே உடன் போட்ட அக்ரீமெண்ட்

அதனால் இப்படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தாமல் விக்னேஷ் சிவனுக்கு என்ன பட்ஜெட் போட்டீர்களோ அதையே வைத்து எடுங்கள் என்று அஜித் கட்டளை போட்டு விட்டார். ஆனால் இவர் இப்படி சொன்னதற்கு காரணம் இனிமேலும் பொருத்திருக்க முடியாது என்ற ஆதங்கத்தில் எடுத்த முடிவு தான்.

எது எப்படியோ லைக்கா நிறுவனத்திற்கு சாதகமாக ஒரு விஷயம் முடிந்ததால் தற்போது பெருமூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆகி இருக்கிறார்கள். ஒருவழியாக அஜித், விடாமுயற்சி படத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சினையை சரி செய்து விட்டார். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை இறுதியில் ஆரம்பிக்கப்படுவதற்கு வேலைகள் அனைத்தும் தயாராகி வருகிறது.

Also read: டச்சப் பாயிலிருந்து விஸ்வரூபம் கண்ட 5 நடிகர்கள்.. அஜித்துக்கே ஹிட் கொடுத்த இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்