தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் படத்தில் நடித்த நடிகை ஒருவரின் முகத்தை பார்த்து அன்றைய பத்திரிகைகளில் கிண்டலாக பேசப்பட்டவர் பின்னாளில் அவர் தான் தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
அஜித்தின் சினிமா வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோல் ஆரம்ப காலகட்டங்களில் தோல்வி படங்கள் கொடுத்தாலும் அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வரவே இல்லை.
ஆனால் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கவிக்கு ஆரம்பத்திலேயே மிகக் கேவலமாக பத்திரிக்கையாளர்கள் எழுதியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது அவரது மனதை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1993 ஆம் ஆண்டு அஜித் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான திரைப்படம் அமராவதி. பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் சங்கவிக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
மேலும் சங்கவியின் முகத்தில் நடிப்புக்கான கலையே இல்லை என பத்திரிகைகளில் கிண்டலடிக்கபட்டதாம். மேலும் உச்சகட்டமாக “இது செத்த மூஞ்சி” என அநியாயத்திற்கு தரம்கெட்ட விமர்சனங்களை பெற்றாராம் சங்கவி.
ஆனால் அடுத்த 5 வருடத்தில் தமிழ் சினிமாவை தன் தோளில் தாங்கிக் கொண்டிருக்கும் நாயகி என்றால் சங்கவி தான் என எழுதி வைத்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சங்கவி ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பதும் கூடுதல் தகவல்.