தனது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படம்.. தனுஷ்க்கு நன்றி தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ்

வளர்ந்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார். நிஜவாழ்க்கையில் தன்னுடன் பிறந்த சகோதரர்கள் இறந்த போக ஐஸ்வர்யா ராஜேஷ் பல தடைகளைத் தாண்டி இந்த இடத்தைப் பிடித்திருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

2014ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெளிவந்த காக்கா முட்டை என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கூவம் ஓரமாக வாழும் மக்களின் இயல்பான வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக இந்த படம் வெளிவந்தது.

ஒரு பீட்சா கடையில் அவமானத்தை சந்திக்கும் சிறுவர்களை வைத்து இந்த படத்தின் கதை நகரும். மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

இந்த படம் வெளிவந்த 6 வருடங்களாகி விட்டது, ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. எப்போதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச் சிறந்த படம் காக்கா முட்டை தான்.

kakka-muttai
kakka-muttai

இந்த படம் தான் என் சினிமா வாழ்க்கை உயர்த்தியது, இப்படத்தை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தனுஷ், வெற்றி மாறன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.

Next Story

- Advertisement -