Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதிக்கட்டத்தை நெருங்க இருக்கிறது. இந்த சூழலில் தனத்திற்கு ஒருபுறம் ஆபரேஷன் என்று பதட்டமாக போய்க்கொண்டிருக்கிறது.
மற்றொருபுறம் வங்கி வேலையை இழந்து கண்ணன் அவதிப்பட்டு வருகிறார். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரச்சனையில் சிக்கி அல்லோலபட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இருக்கிற பிரச்சனை பத்தாது என்பதற்கு ஏற்ப புது பிரச்சனையை கிளப்பி விட்டிருக்கிறார் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா. அதாவது யூடியூப் மோகத்தால் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
Also Read : உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்
இது மூர்த்திக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று நேரடியாக மற்றும் மறைமுகமாக பல தடவை கூறியிருக்கிறார். ஆனாலும் எதற்கும் அஞ்சாத ஐஸ்வர்யா தனது கணவன் கண்ணன் வேலை போவதற்கு காரணம் வங்கி மேனேஜர் தான் என்று அனுதாபம் தேட ஒரு வீடியோ போட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவை தேடி இரண்டு பேர் வீட்டுக்கு வருகிறார்கள். தங்களின் நிலையை நினைத்து உதவ தான் வந்திருக்கிறார்கள் என்று ஐஸ்வர்யா கண்ணனிடம் கூறுகிறார். ஆனால் அங்கு வந்ததோ வங்கி மேனேஜரின் தம்பி தான்.
Also Read : வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல
இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இங்கு நடப்பதே வேறு என அடாவடி செய்கிறார்கள். இதனால் வேறு வழி இன்றி கண்ணன் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். நீங்க கேட்டா மட்டும் பத்தாது இந்த வீட்ல உள்ள நண்டு சிண்டு எல்லாருமே மன்னிப்பு கேட்கணும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே வீட்டில் 1008 பிரச்சனை இருக்கும் போது ஐஸ்வர்யாவால் ஏற்பட்ட இந்த புதிய பிரச்சனையை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்படி சமாளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இத்தொடர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மீண்டும் மூர்த்தியின் கோபத்திற்கு ஐஸ்வர்யா உள்ளாகி இருக்கிறார்.
Also Read : காட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. வாய்ப்புக்காக தீயாக செய்யும் வேலை