Connect with us
Cinemapettai

Cinemapettai

iswarya-ethirneechal

India | இந்தியா

பெரியப்பா குணசேகரனை மூக்கு உடைய கொடுத்த பதிலடி.. வாயடைத்து போன எதிர்நீச்சல் குடும்பம்

பெரியப்பாவிற்கு எதிராக ஐஸ்வர்யா கொடுத்த பதிலடி அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ப்ரைம் டைம் சீரியலான எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய கொடுமைகளை எதார்த்தமான முறையில் காண்பித்து வருகின்றனர். ஆனால் குணசேகரன் குடும்பத்தில் மட்டும் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை வகுத்துள்ளனர். 

அதன்படி படித்து எப்படி எல்லாம் இருந்திருக்க வேண்டிய பெண்களை திருமணம் என்ற பெயரில் வீட்டில் அடிமையாக்கி வைத்துள்ளனர். தற்பொழுது அதற்கெல்லாம் மாறாக குடும்பத்தில் உள்ளபெண்களும் தங்களுக்கான உரிமையை மீட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே பேச உரிமை உள்ள நிலையில், மருமகள்களும் எங்களுக்கும் சம உரிமை உள்ளது என்று புரிய வைத்து வருகின்றனர்.

Also Read: எதிர்நீச்சல் சீரியலுக்கு வச்ச ஆப்பு.. என்ட்ரியானது மெய்சிலிர்க்கூட்டும் புத்தம் புது சீரியல்

இவ்வாறாக வீட்டில் உள்ள மருமகள் மட்டுமல்லாமல் குழந்தைகளும்  குணசேகரனுக்கு எதிராக வாய் பேச தொடங்கியுள்ளனர். இதனால் கதி கலங்கி நிற்கும் இவருக்கு துணைக்கு கூட யாரும் இல்லாமல் தனிமரமாய் தவித்து வருகிறார். இவரின் தாயார் அவரது தம்பி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், கதிரும் தொழில் சம்பந்தமாக வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில் அண்ணன் சொன்னதையும் மீறி ஐஸ்வர்யாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜனனி மற்றும் சக்தி இவர்களின் செயலால் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஐஸ்வர்யாவின் சந்தோஷத்திற்காக இதனை செய்துள்ளனர்.

Also Read: புது சீரியல் என்ட்ரியால் பாய் பிரண்டுடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஆல்யா.. அம்மணி சிக்கும் அடுத்த சர்ச்சை

இதனைத் தொடர்ந்து ரேணுகா, ஜனனியிடம் தனது மனதில் உள்ள பாசத்தினை கண் கலங்கிய படியே வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஞானசேகரன் உடைய மகளின் பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார். ஆனால் இதற்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில் குணசேகரன் தனது வார்த்தைகளால் சீண்டியுள்ளார்.

ஆனால் சற்றும் எதிர்பார்க்காத குணசேகரனுக்கு ஐஸ்வர்யா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நாங்கள் வெளியே சென்று விடுகின்றோம். மேலும் இதற்கு மேல் நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்று பெரியப்பாவின் மூக்கு உடையும் அளவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இப்படியாக குணசேகரனை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சில்வண்டு வரை ரவுண்டு கட்டி விளாசி வருகின்றனர். இதனால் இது எல்லாம் உங்களுக்கு தேவை தான் என்பது போல் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றன.

Also Read: கயல் முதல் பாக்கியலட்சுமி வரை.. இளசுகளின் இஷ்டமான டாப் 5 சின்னத்திரை நடிகைகள்

Continue Reading
To Top