பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடித்த அடுத்த பிரச்சினை.. குட்டையை குழப்பி விடும் ஐஸ்வர்யா!

விஜய் டிவியில் கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இந்த வாரம் ஐஸ்வர்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புது பிரச்சினையை உருவாக்கியுள்ளார்.

ஏனென்றால் பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாட நினைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், வீட்டில் பொங்கல் வைப்பதற்காக வேண்டிய பொருட்களை பரண்மீது இறக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வழக்கம்போல் கண்ணன் அந்த வேலையை செய்வதால் அவனை வைத்தே செய்யலாம் என்று தனம் கூறுகிறார்,

ஆனால் ஐஸ்வர்யா, ‘கண்ணனை சின்ன பையன் போல் வேலை வாங்காதீர்கள். கதிர் மாமாவை பரண் மீது ஏறி பொருட்களை பரண்மீது இருந்து எடுத்துச் செல்லுங்கள்’ என்று பட்டென்று பேசி விடுகிறார். இதனால் மன வருத்தம் ஏற்பட்ட தனம் கண்ணனிடம், கடையில் வேலை செய்யும் சரவணனை வீட்டுக்கு வரச் சொல்கிறார். எதற்கு என்று கண்ணன் கேட்க, பரண் மீது இருக்கும் பொருட்களை இழக்க வேண்டும் என்கின்றார்.

வழக்கமாக நான் தானே அந்த வேலையை செய்வேன் இந்த வருடமும் நானே செய்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் ஐஸ்வர்யா தனதிடம் பேசியதை மீனா போட்டு உடைத்து விடுகிறார். அதன்பிறகு கண்ணன் ஏணியை எடுத்துக் கொண்டு பரண்மீது இருக்கும் பொருட்களை எடுக்க போகிறார்.

ஆனால் தனம் அதை செய்ய வேண்டாம் என்று தடுக்க, கண்ணன் என்னை உங்களுடைய பழைய கண்ணும் போலவே நடத்துங்கள் என்று கண்கலங்கி பேசியது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உருகச் செய்தது. அதன்பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவிடம் எடுத்து புரியவைத்து தனதிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

இவ்வாறு கூட்டு குடும்பத்தில் ஒரு சில சண்டை சச்சரவு ஏற்பட்டாலும், அதை சமரசமாக பேசி தீர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி நிலைக்கும் என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் மீண்டும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கிறது. இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்