புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொங்கியெழுந்த ஐஸ்வர்யா, அதிர்ந்த குடும்பத்தினர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இதில் அடுத்த வாரத்திற்கான புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

லட்சுமி அம்மாவின் மறைவுக்குப் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பூஜை செய்ய திட்டமிடுகின்றனர். இந்த பூஜையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று தனம் கூறுகிறார்.

அவரின் வற்புறுத்தலின் காரணமாக கண்ணன், ஐஸ்வர்யா கோவிலுக்கு வர மூர்த்தி சம்மதிக்கிறார். அதன்படி கோவிலுக்கு வரும் கண்ணன், ஐஸ்வர்யா இருவரையும் எந்த சடங்குகளையும் செய்ய குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.

மேலும் கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது கண்ணனை ஒதுங்கி நிற்க கூறுகிறார்கள். இதனால் மனமுடைந்து போன கண்ணன் கதறி அழுகிறார். இவ்வாறாக காட்சி முடிவடைந்தது.

தற்போது வெளியான அடுத்த வார எபிசோடில் கண்ணனை குடும்பத்தினர் அவமானப்படுத்துவதை கண்டு பொறுக்க முடியாத ஐஸ்வர்யா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

எங்களைப் பிடிக்கவில்லை என்றால் எதற்காக கோவிலுக்கு வர சொன்னிங்க என்றும் எந்த சடங்கையும் செய்ய விடாமல் கண்ணனை அவமானப்படுத்துறீங்க என்று கேட்கிறார். மேலும் கண்ணனுக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கா இல்லையா என்று கோபமாக வாதாடுகிறார். இந்தக் கேள்வியினால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து நிற்கின்றனர்.

pandiyan-store
pandiyan-store

இதற்கு மூர்த்தி என்ன பதில் அளிப்பார் என்று வரும் வாரத்தில் தெரியவரும். இதை பார்க்கும் பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மிகப் பெரிய சண்டை ஒன்று காத்திருக்கிறது என்று தெரிகிறது.

- Advertisement -

Trending News