ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

கடன் பிரச்சினையால் மாட்டி தவிக்கும் ஐஸ்வர்யா, கண்ணன்.. எவ்வளவு பட்டும் திருந்த மாட்டாங்க போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தியை பிரிந்து ஜீவா மற்றும் கண்ணன் தனியாக போய்விட்டார்கள். இதில் ஜீவா என்னதான் மீனாவின் அப்பா வீட்டில் இருந்தாலும் அவருடைய மனம் முழுவதும் அவருடைய அண்ணனைப் பற்றிய ஞாபகங்கள் மற்றும் அந்த வீட்டை சுத்தி தான் இருக்கிறது. அவரால் சகஜமாக மாமனார் வீட்டில் இருக்க முடியவில்லை. அதிலும் தற்போது ஜனார்த்தன் அவரை ஒரு டம்மியாகத்தான் வைத்திருக்கிறார் என்று நினைத்து ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்.

பிறகு மீனா, கயல் பாப்பாவை அழைத்து தனத்தை பார்க்க வருகிறார். தனம் இவர்களை பார்த்து ரொம்பவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மூர்த்தியும் வருகிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து பேசும்பொழுது தனம் ஜீவாவை பற்றி கேட்கிறார். அதற்கு மீனா அவன் அங்கு சந்தோசமாக இல்லை கூடிய சீக்கிரமே இங்கே உங்களை தேடி ஓடுடி வருவான். நாம் மறுபடியும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக இருப்போம் என்று சொல்கிறார்.

Also read: கோபியின் அம்மாவிடம் சவால் விடும் ராதிகா.. அப்பாவைப் போல ரூட் போடும் செழியன்

அடுத்ததாக ஐஸ்வர்யா இவருடைய யூடியூப் சேனலை இன்னும் பெரிது படுத்த வேண்டும் என்பதற்காக பணம் தேவைப்படுது என்று கண்ணனிடம் சொல்கிறார். அதற்கு கண்ணன் என்னிடம் ஒத்த பைசா கிடையாது. இதைக் கேட்டு ஐஷு , நீ மூர்த்தி மாமா கிட்ட கேளு என்று சொல்கிறார். அதற்கு கண்ணன் என் அண்ணனுக்கு சேனல் பண்றதே பிடிக்க மாட்டேங்குது. இதுல எப்படி நான் போய் பணம் கேட்க முடியும், என்னால் முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

உடனே  ஐஸ் அப்படி என்றால்  கதிர் மாமாவிடம் போய் கேளு. அவங்க நமக்கு உதவியாக தானே
இருக்கிறாங்க அவங்க கண்டிப்பா நமக்கு உதவி பண்ணுவாங்க என்று சொல்கிறாள். இதற்கு கண்ணன், கதிர் அண்ணன் கிட்ட ஏற்கனவே ஆஸ்பத்திரி செலவுக்கு நிறைய வாங்கிட்டேன். மறுபடியும் என்னால காசு கேட்க முடியாது என்று மறுக்கிறார். ஐஸு நம்ம எல்லாம் ஒரே குடும்பம் இந்த உதவி கூட பண்ணலேன்னா எப்படி அதெல்லாம் பண்ணுவாங்க நீ போய் கேளு என்று சொல்கிறாள்.

Also read: இனியாவை பொக்கிஷமாக பாதுகாக்கும் விக்ரம்.. இங்கிதம் தெரியாமல் அசிங்கப்பட்ட நல்லசிவம்

இதை கேட்ட கண்ணன் இப்ப மட்டும் உனக்கு குடும்பமா தெரிகிறதா. அவங்க ஏதாவது ஒன்னு சொல்லும்போது அப்படி போய் சண்டை போட்டுட்டு இருக்க. நீங்களா யார் இத சொல்றதுக்கு என்று கேட்க. இப்போ இப்படி பேசுற என்று கேட்க அதற்கு ஐஸு அவர் ஒன்னும் காசு சும்மா தர வேண்டாம். நம்ம யூடியூப் சேனல் மூலமாக பணம் வந்ததும் நாம் அதை திருப்பி கொடுத்து விடலாம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக கண்ணன் வேலைக்குப் போகும் போது அவரைத் தேடி வீட்டுக்கு கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட ஆள்கள் வட்டியும் செலுத்தவில்லை, கடனும் கொடுக்கவில்லை என்று கேவலப்படுத்தி விட்டார்கள். இதனால் நொந்து போன கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் ஐஸ்வர்யா இதுதான் சந்தர்ப்பம் என்று கதிரிடம் பணம் கேட்க தூண்டி விடுகிறார். இதைத் தெரிந்து இவர்களுக்கு கதிர் வந்து பணம் கொடுத்து உதவுகிறார்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு நந்தினி.. ஜனனி கஸ்டடியில் அருண்

- Advertisement -spot_img

Trending News