நாலா பக்கமும் ஜெயம் ரவிக்கு போடப்பட்ட கேட்.. 2 வருஷமா இழுத்தடிக்கும் ரெட் ஜெயண்ட்

Kiruthiga Udhayanidhi: எந்த ஒரு நிதி நெருக்கடியும் இல்லாத நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ். படம் தயாரிப்பு , விநியோகஸ்தம் என எல்லா பக்கமும் கொடி கட்டி பறப்பவர்கள். தற்போது இந்த நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு படத்தை இழுத்தடித்துக் கொண்டே போகிறார்கள்.

உதயநிதி மாமன்னன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அவரது மனைவி கிருத்திகா உதயநிதி இப்பொழுது படம் இயக்கி வருகிறார். பேப்பர் ராக்கெட் என்னும் ஒரு வெப் தொடரை, காளிதாஸ் ஜெயராமன், தானியா ரவிச்சந்திரன் போன்றவர்களை வைத்து இயக்கினார்.

நாலா பக்கமும் ஜெயம் ரவிக்கு போடப்பட்ட கேட்

அதன் பின்னர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிக்க காதலிக்க நேரமில்லை என்னும் ஒரு படத்தை இயக்கப் போவதாக இரண்டு வருடத்திற்கு முன்னரே பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கவில்லை. ஜெயம் ரவி சமீபத்தில் ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் உச்சகட்ட மன அழுத்தத்தில் இருக்கிறார்.

15 முதல் 20 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு பிரபல இயக்குனர் ஒருவர் வரலாற்று படத்தில் சம்பளத்தை குறைத்துள்ளார். கால் சீட் கம்மியான நாட்கள் என வெறும் 4 கோடிகள் கொடுத்துள்ளார். இதனால் அந்த இயக்குனரின் அடுத்த படத்திலிருந்து விலகி விட்டார் ஜெயம் ரவி.

கிருத்திகா உதயநிதி இப்பொழுது காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார். இந்த படத்தின் சூட்டிங் இன்னும் ஓரிரு நாட்களில் ஆரம்பிக்கவிருக்கிறது. முப்பது நாட்கள் ஒரே ஷெட்யூல், சென்னையில் படமாக்க போகிறார்கள். நேரம் சரியில்லாத ஜெயம் ரவிக்கு இப்போதுதான் நல்ல காலம் பிறந்து இருக்கிறது.

ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் ஜெயம் ரவிக்கு வந்த சோதனைகள்

- Advertisement -