திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

வெறி கொண்ட வேங்கையாக சீறிய ஜெயம் ரவி.. அகிலன் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயம் ரவி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அகிலன் திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடல் வழி மாபியாக்கள் பற்றி கூறியிருக்கும் இந்த திரைப்படம் சமூகத்திற்கான அழுத்தமான மெசேஜையும் கொடுத்திருக்கிறது. இதுதான் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் சாமானிய மக்களுக்கு கடல் வழி வாணிபத்தில் இருக்கும் பல விஷயங்கள் தெளிவாக தெரிவதற்கு வாய்ப்பில்லை.

Also read: ஜெயம் ரவிக்காக நடையாய் நடக்கும் மாமியார்.. திரும்பி கூட பார்க்காத சன் டிவி

அதிலும் நினைக்க முடியாத அளவுக்கு பல சர்வதேச குற்றங்களும் இதில் நடைபெறுகிறது என்பதை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது சிறப்பு. அந்த கதை கருவை உள்வாங்கி ஜெயம் ரவியும் மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார். அதனாலேயே இப்போது அவர் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் முதல் நாள் ஓப்பனிங் சொல்லிக் கொள்ளும் படியாக தான் அமைந்துள்ளது.

அதன்படி அகிலன் படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு கோடியை நெருங்கி இருக்கிறது. அதை தொடர்ந்து கேரளாவிலும் 80 லட்சம் வரை வசூலித்திருக்கிறது. ஆனால் எப்படியும் இப்படம் மூன்று கோடியை தமிழ்நாட்டில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வசூல் அவ்வளவு மோசம் இல்லை என்ற ரகத்தில் இருக்கிறது.

Also read: கடல் வழி மாஃபியாவின் நிஜ முகம் தான் அகிலன்.. எப்படி இருக்கு? முழு விமர்சனம்

ஏனென்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படங்களில் வாத்தி திரைப்படத்தின் வசூல் தான் லாபகரமாக இருந்தது. அதேபோன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வரும் அயோத்தி திரைப்படமும் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அகிலன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய கலெக்சனாக தான் பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த வசூல் அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜெயம் ரவி இந்தப் படத்தால் எப்படியோ கரை சேர்ந்து விட்டார்.

Also read: ஹார்பர் க்ரைமை வெளிச்சம் போட்டு காட்டும் அகிலன்.. ஜெயம் ரவிக்கு வெற்றியா, தோல்வியா.? ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -

Trending News