விக்ரம் பட போஸ்டரை மரணமாக கலாய்த்த வடிவேலு நேசமணி.. ட்ரெண்டான புகைப்படம்!

தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக தனது நடிப்பு மூலம் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர். ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு அனைத்து ஹீரோக்களும் இவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய விரும்பினர்.

இவர் நடித்த 23ஆம் புலிகேசி குழந்தைகள் மத்தியில் பிரபலமாகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யார் என்று கேட்டால் யோசிக்காமல் வடிவேலு என கூறுவார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த காமெடி நடிகர் என்று கூறலாம்.

அதுமட்டுமின்றி இவர் இல்லாத மீம்ஸ்களே கிடையாது. இவரை வைத்து தான் மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு பொழப்பு ஓடுது என்று கூட கூறலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசமணி என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலானது.

விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டரை மையமாக வைத்து உலக அளவில் நேசமணி ஹேஷ்டேக் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டரை கேலி செய்து நேசமணி என்ற ஹேஷ்டேக் பரவி வருகிறது. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.

nesamani
nesamani

அதேபோன்று வடிவேலு, ரமேஷ் கண்ணா மற்றும் சார்லி ஆகிய மூன்று பேர்களின் புகைப்படங்களை வைத்து மீண்டும் நேசமணி படம் என குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -