ஜவான் வெற்றியால் தமிழுக்கு முழுக்கு போடும் அட்லீ.. காப்பினாலும் நரசுஸ் காப்பிதான் வேணுமாம்

Director Atlee Next Project: தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜவான் படத்தின் வெற்றி முழக்கங்கள் தான் ஒலித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.

என்னதான் அட்லீ இயக்கக்கூடிய படங்கள் காப்பி கதை என்று சொல்லி வந்தாலும் மக்களுக்கு எந்த மாதிரி கொடுத்தால் பிடிக்கும் என்று தெரிந்து அந்த யுக்தியை பயன்படுத்தி வருகிறார். அதனாலேயே தற்போது அட்லீ வெற்றி இயக்குனராக ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டார். அத்துடன் பாலிவுட்டில் இருக்கும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கண்ணுக்கும் பொக்கிஷமாக தென்பட்டு வருகிறார்.

Also read: அட்லீ – எங்கள பார்த்தா மெண்டல் மாதிரி இருக்கா.? பிசிரு தட்டாமல் 5 படங்களில் இருந்து காப்பியடித்த புகைப்பட ஆதாரம்

அந்த வகையில் தற்போது ஜவான் படத்தை முடித்த கையோடு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டு வரலாம் என்று நினைத்து வீட்டில் வந்திருக்கும் இவருடைய புது வரவான குழந்தையுடன் நேரத்தை ஒதுக்கிக்கொண்டு பொறுப்பான அப்பாவாக செயல்பட்டு வருகிறார். மேலும் மனைவி குழந்தையுடன் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு சென்று வந்த பின்னரே அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

இதற்கிடையில் இவர் எடுக்கக்கூடிய படங்கள் பற்றி பல பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் இவர் அடுத்த படத்தை பண்ணப் போகிறார் என்று இருந்தது. ஆனால் தற்போது லோகேஷ் ரஜினி கூட்டணியில் தலைவர் 171 படத்தில் சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி பிஸியாக இருப்பதால் அட்லீக்கு இருந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

அடுத்தபடியாக தெலுங்கு ஹீரோ ராம்சரணுக்காக கதை ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய அடுத்த படம் இவருடன் தான் அமையப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ஜவான் படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் மறுபடியும் இவருடைய முழு கவனமும் பாலிவுட் பக்கமே திரும்பி விட்டது.

அதற்கு காரணம் தற்போது அட்லீ பாலிவுட்டில் பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து மறுபடியும் அங்கே படம் எடுத்தால் இவருடைய ரேஞ்ச் வேற லெவல்ல மாறிவிடும். அத்துடன் வெற்றிக்கும் பெரிய அளவில் கை கொடுக்கும் என்பதற்காக இவருடைய வாழ்நாள் கனவாக ஆசைப்பட்டு கொண்டிருக்கும் ரன்வீர் சிங்கை வைத்து படம் எடுக்கப் போகிறார். அட்லீ ரன்வீர் சிங்-கின் மிகப்பெரிய தீவிர ரசிகர். அதற்காக தற்போது அவரை வைத்து பிள்ளையார் சுழியை போடப் போகிறார்.

Also read: ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

Next Story

- Advertisement -