அருவருப்பாக மாறிய VJ பார்வதி..

ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலம் அடைந்த நடிகை விஜே பார்வதி. சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட நாள் முதலே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையே பகிர்ந்து கொண்டதன் மூலம் போட்டியாளர்கள் அனைவருடனும் தொடர்ந்து கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் மக்கள் பார்வதி என்றாலே முகம் சுளித்தனர். அத்துடன் வாயாடி என்றும் பெயரை பெற்றுவிட்டார்.

இவர் எலிமினேஷன் செய்யப்பட்டு மூன்றாம் உலகத்திற்கு சென்றபோது பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அங்கிருந்தும் ராமுடன் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று மீண்டும் நிகழ்ச்சிகள் அடி எடுத்து வைத்தார். அதன்பிறகும் பார்வதியின் குணம் மாறவில்லை, சக போட்டியாளர்களுடன் வழக்கம்போல் சர்ச்சையில் ஈடுபட்ட வந்து கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி தனது தற்போதைய புகைப்படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். கமெண்ட்ஸ் அனைத்தும் தாறுமாறாகவும், மோசமாகவும் வந்து கொண்டிருக்கிறது.

ஏனெனில் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பார்வதி, தனது சர்வைவர் நிகழ்ச்சிக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைத்து வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வைவரால் தனது முகத்தின் பொலிவு குறைந்து விட்டதாகவும் கூறி வருகிறார்.

இதற்கு ரசிகர்கள் சிலர், ‘இந்த புகைப்படத்தில் ஃபுல் மேக்கப்புடன் இருக்கீங்க, இப்போ மேக்கப்பை காணோம், அதான் வித்தியாசம், என்றும், ‘உங்க மூஞ்சி எப்போதும் போல தான் இருக்கு அப்படி ஒன்னும் பெரிய மாற்றம் தெரியலையே, என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.vj-parvathy

vj-parvathyஇதைப் போன்றுதான் ஏற்கனவே சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்த சிருஷ்டி டாங்கே சர்வைவல் நிகழ்ச்சியால் முகம் பழுதடைந்தது என சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதே போன்று தற்போது பார்வதியும் செய்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்