விஜய்யுடன் நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. தளபதி 67க்கு அர்ஜுனை போல் நோ சொன்ன 90ஸ் ஹீரோ

நடிகர் விஜய் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தன்னுடைய 67 வது படத்தில் இணைகிறார். தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. விஜய் வாரிசு படத்திற்கான வேலைகளை தொடங்கிய போதே தளபதி 67 சம்மந்தப்பட்ட செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். இப்போது தளபதி 67 க்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார். இந்த படம் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது எனவும், ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்னும் ஆங்கில படத்தின் ரீமேக் எனவும் சொல்லி வருகின்றனர்.

Also Read: வாரிசு படத்திற்கு கும்பிடு போட்ட விஜய்.. தடபுடலாக ஆரம்பமாகும் தளபதி 67

கேங்ஸ்டர் கதை என்பதால் இந்த படத்தில் விஜய்க்கு மொத்தம் ஏழு வில்லன்களாம். ஏற்கனவே சஞ்சய் தத், விஷால் நடிப்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது. இயக்குனர் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 90ஸ் ஹீரோ ஆக்சன் கிங் அர்ஜுனிடம் இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் அவர் மறுத்துவிட்டார்.

இப்போது ‘நவரச நாயகன்’ கார்த்திக்கிடம் தளபதி 67 ல் நடிக்க லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார். கார்த்திக்குக்கு இந்த படத்தின் கதையும் பிடித்துவிட்டதாம். இருந்தாலும் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார். கார்த்திக் நடிக்காமல் போனதற்கு தன்னுடைய உடல்நிலையை காரணம் சொல்லியிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே கால்வலி இருப்பதால் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது கடினம் என சொல்லிவிட்டாராம்.

Also Read: விஜய்யை அட்டை பூச்சி போல ஒட்டிக் கொள்ளும் நடிகை.. தளபதி-67 வாய்ப்புக்காக செய்த வேலை

கார்த்திக் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அனேகன் திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பட்டையை கிளப்பி இருந்தார். தனுஷ், அமைரா தாஸ்தூர் நடித்த இந்த படத்தில் கார்த்திக் நடித்த நெகட்டிவ் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருந்தது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை. இருந்தாலும் விஜய்-கார்த்திக் காம்போவில் காட்சிகள் அமைந்திருந்தால் இன்னும் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.

நடிகர் விஜய் வாரிசு பட வேலைகள் முடிந்த கையோடு தன்னுடைய 67வது படத்திற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். வரும் டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67க்கான பூஜை நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வரும் நாட்களில் தளபதி 67ன் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.

Also Read: இந்த இங்கிலீஷ் படத்தின் காபிதான் தளபதி-67 கதையா.? அட்லீ போல சிக்கலில் மாட்டிய லோகேஷ்

Next Story

- Advertisement -