ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மணிமேகலையை தொடர்ந்து வெளியேறும் மற்றொரு பிரபலம்.. குக் வித் கோமாளி டிஆர்பிக்கு ஆப்பு

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றாலே ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள். தளபதி விஜய் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று மந்தமாக தான் இருந்து வருகிறது. காரணம் என்னவென்றால் சுவாரஸ்யம் சற்று குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கடந்த சீசன்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் மணிமேகலை. இவருடைய காமெடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read : இணையத்தை கலக்கும் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. விட்டுக்கொடுக்காமல் போட்டி போடும் சன், விஜய் டிவி

ஆனால் சில சொந்த காரணங்களினால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பாதியில் இருந்து மணிமேகலை விலகி விட்டார். அதேபோல் மற்றொரு பிரபலமும் விலகி உள்ளார். அதாவது டிக் டாக் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் ஜி பி முத்து. இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் தனது குழந்தைகளைப் பிரிந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாத சூழலால் ஒரு வாரத்திலேயே வெளியே வந்து விட்டார். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரணகளம் செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரித்து வைக்கிறார். இப்போது ஜிபி முத்துக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது.

Also Read : டிஆர்பிக்காக கெஞ்சி கூத்தாடிய விஜய் டிவி.. கோபி எடுத்த அதிரடி முடிவு

இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது ஜி பி முத்து ஓய்வு இல்லாமல் ஷூட்டிங், படவேலை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார். மேலும் குக் வித் கோமாளியில் ஜாலி என்ற பெயரில் கத்தி கத்தி பேசி உடலை சோர்வடைய வைத்து விடுகிறார்கள். இதனால் அவருக்கான ஓய்வு கண்டிப்பாக தேவை.

ஆகையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலக உள்ளார். ஏற்கனவே மணிமேகலை விலகியதால் நிகழ்ச்சியின் டிஆர்பி சரிந்த நிலையில் இப்போது ஜிபி முத்துவும் விலக உள்ளதால் விஜய் டிவி மேலும் சரிவை சந்திக்க உள்ளது. இதற்காக வேறு தரமான கோமாளியை இறக்க விஜய் டிவி திட்டம் தீட்டி வருகிறதாம்.

Also Read : KWC 4-ல் திடீரென வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த 2 பிரபலங்கள்.. பழம்பெரும் நடிகரின் பேரனை களம் இறக்கிய விஜய் டிவி

- Advertisement -

Trending News