இந்தியன் 2-விற்கு பின் அடுத்தடுத்து கமல் கூட்டணி போடும் 2 இயக்குனர்கள்.. 1000 கோடி வசூலை பார்த்தே ஆகணுமாம்

1996 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் உருவான சூப்பர் ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கமலஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை லைக்கா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதால் இந்தியன் 2-விற்கு பின் அடுத்தடுத்து கமல் இரண்டு மாஸ் இயக்குனர்களின் படங்களில் இணைகிறார்.

Also Read: இந்த ஆண்டு வரிசை கட்டி நிற்கும் 8 இரண்டாம் பாக படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறச் செய்த பொன்னியின் செல்வன் 2

இந்தப் படங்களில் நிச்சயம் 1000 கோடியை அள்ள வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர். அஜித்தின் ஆஸ்தானை இயக்குனரான ஹெச் வினோத் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பதற்காக கமிட்டாக இருக்கிறார். இந்த படத்திற்காக கமல் 35 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கக்கூடிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கான படப்பிடிப்பை இந்தியன் 2 படம் நிறைவடைந்த உடன் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த இரண்டு ப்ராஜெக்ட் மூலம் விக்ரம் படத்தை போல் பாக்ஸ் ஆபிஸை மிரட்ட வேண்டும் என்று கமலஹாசன் ஒரு முடிவுடன் இருக்கிறார்.

Also Read: தீபாவளி ரிலீஸை குறி வைக்கும் டாப் 2 ஹீரோக்களின் படங்கள்.. இந்தியன் 2 வுக்கு டஃப் கொடுக்க வரும் ஹீரோ

ஆனால் கமல் இந்தியன் 2 படத்திற்கு பின் ஒரு மாதம் இடைவெளி எடுத்துக்கொண்டு, வெக்கேஷனுக்கு அமெரிக்கா செல்கிறாராம். அங்கிருந்து வந்தபின் வினோத் மற்றும் மணிரத்தினம் இயக்கும் படங்களில் நடிக்க கமலஹாசன் தயாராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியன் 2 படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்குப் பிறகு உலகநாயகன் நடிக்கப் போகும் அடுத்த இரண்டு ப்ராஜெக்ட்டிலும் தரமான கூட்டணியில் இணைந்திருக்கிறார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: அதிக பட்ஜெட்டில் உருவாகும் 5 படங்கள்.. லியோ விஜய்க்கு டஃப் கொடுக்கும் ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்