அஜித்திடம் சென்ற GOAT பட தயாரிப்பாளர்.. லைட்டா பயம் கண்ணுல தெரியுதாம்

AK 64 Directors : அஜித் பட அப்டேட்டுக்காக வருஷ கணக்கில் காத்துக் கிடந்த காலமெல்லாம் மலையேறி போச்சு. அதிரடியாக அப்டேட்டுகளை கொடுத்து அசத்தி வருகிறார் அஜித். போதும் லிஸ்ட் நீண்டு கொண்டே போகுது என்று அஜித் ரசிகர்களே திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, படத்தின் அப்டேட் வெளியானது. சத்தமே இல்லாமல் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்து விட்டார்கள். மார்க் ஆண்டனி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி அமைத்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு அமைந்திருக்கிறது.

ரஜினி மற்றும் கமலுக்கு அமைந்த மாதிரி அஜித்திற்கும் ஒரு ஃபேன் பாய் படம் அமைந்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் பெருமிதத்தில் இருக்கிறார்கள். தற்போது அஜித்தின் 64 ஆவது படத்திற்கும் அப்டேட் வெளியாகிவிட்டது.

இதற்கு முன்பே அஜித் உடைய 64 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெற்றிமாறன் அந்த படத்தை இயக்கவில்லை என்பது உறுதியாகி இரண்டு இயக்குனர்களின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது.

ஏஜிஎஸ் உடன் இணையும் அஜித்

அஜித்துக்கு வீரம் மற்றும் விஸ்வாசம் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்த சிறுத்தை சிவா பெயர்தான் இதில் முதலில் இருக்கிறது. இருந்தாலும் விவேகம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் சிறுத்தை சிவாவுக்கு கை கொடுக்கவில்லை.

அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் வெளிவந்த 4 படங்கள்

வீரம்
வேதாளம்
விவேகம்
விஸ்வாசம்

தற்போது கங்குவா படத்தை தான் அவர் பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பாத்துட்டு நல்ல விமர்சனங்களை பெற்று விட்டால் அஜித்துடன் இவர் இணையும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

அதே நேரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பெயரும் பரிசீலனையில் இருக்கிறது. மோகன் ராஜா நிறைய ரீமேக் படங்களை கொடுத்து பெரிய அளவில் வெற்றி அடைந்தவர்.

அவருடைய சினிமா பயணத்திற்கு தனி ஒருவன் படம் பெரிய அடிக்கல். அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித் உடன் இவர் இணைந்தால் கண்டிப்பாக தனி ஒருவன் தரத்திற்கு ஒரு படம் வரும் என நம்பலாம். இருந்தாலும் மோகன் ராஜா இப்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்.

இரண்டு பேரில் யார் முதலில் தன்னுடைய மற்ற வேலைகளை முடித்துவிட்டு, அஜித்துக்கு பிடித்த கதையோடு வருகிறார்கள் அவர்கள் தான் ஏகே 64 படத்தை இயக்கப் போகும் இயக்குனர். விஜயின் GOAT படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் AGS தயாரிப்பு நிறுவனம் தான் அஜித்தின் 64வது படத்தை தயாரிக்க இருக்கிறது. GOAT படத்தில் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்காம்.

AGS தயாரிக்கும் 4 முக்கிய படங்கள்

Goat – Greatest of all time
Dragon
Thani Oruvan 2
AK 64

இரண்டு இயக்குனர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற முடிவை AGS நிறுவனத்திடமே அஜித் ஒப்படைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அடுத்தடுத்து அஜித் பட அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருப்பதால் அவருடைய ரசிகர்கள் தலைகால் புரியாமல் கொண்டாடி வருகிறார்கள்.

வெறும் போஸ்டரை வைத்து அஜித் செய்த ஓடிடி வியாபாரம்

Stay Connected

1,170,283FansLike
132,035FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -