ராம்கி நடித்து மெகா ஹிட்டான 5 படங்கள்.. பல வித்தியாசமான படத்தில் நடிச்சிருக்காரே மனுஷன்

சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராம்கி. இவர் நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமாருக்கு நெருங்கிய சொந்தக்காரர் ராம்கி.

இவர் நடிப்பில் தமிழ் சினிமா மூலம் அங்கீகாரம் பெற்று, வெற்றி கண்ட படங்கள் நிறைய உள்ளது, அந்த வரிசையை தற்போது பார்க்கலாம். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 2007க்கு பிரியாணி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் ராம்கி சிறு கதாபாத்திரம் என்றாலும், தான் இருப்பதை ரசிகர்களுக்கு நினைவு படுத்திவிட்டு சென்றார். கடைசியாக 2019 ஆக்ஷன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

செந்தூரப்பூவே:

தேவராஜ் இயக்கத்தில் ஆபாவாணன் தயாரித்து,எழுதிய விஜயகாந்த், ராம்கி, நிரோஷா, சந்திரசேகர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1988ல் வெளிவந்த படம் செந்தூரப்பூவே. இந்த படம் கிட்டத்தட்ட 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. ராம்கிக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கொடுத்த படம் என்றே கூறலாம்.

மருதுபாண்டி:

ராம்கி, நிரோஷா பிரபலங்கள் நடிப்பில் 1990-ல் வெளிவந்தது மருதுபாண்டி. இந்த படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் சாதனை படைத்த லிஸ்டில் உள்ளது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார், படத்தின் வெற்றியை வைத்து கன்னட, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஊர்காவலனாக மருதுபாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ராம்கி. கிராமத்து மக்கள் மனதில் இந்த கதாபாத்திரத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்து விட்டார் ராம்கி.

இணைந்த கைகள்:

விஸ்வநாதன் இயக்கத்தில் ராம்கி, அருண் பாண்டியன்,நிரோஷா, நாசர்,செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1990ல் வெளிவந்த படம் இணைந்த கைகள். ஆபாவாணன் கதை எழுதியது மட்டுமில்லாமல் பாடல்களையும் எழுதியிருப்பார். இந்த படம் அந்த வருடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ஆக்ஷன் கலந்த இந்த படத்தில் ராம்கிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வனஜா கிரிஜா:

கேயார் இயக்கத்தில் நெப்போலியன், ராம்கி,குஷ்பூ, ஊர்வசி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1994-ல் வெளிவந்த படம் வனஜா கிரிஜா. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார். முழுக்க முழுக்க காமெடி படம், இந்த படமும் ராம்கிக்கு ஹிட் கொடுத்த படம் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

மாயாபஜார்:

மீண்டும்  கேயார் இயக்கத்தில் ராம்கி, ஊர்வசி, விசு, விவேக் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் மாயாபஜார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். காமெடி கலந்த ஹாரர் திரைப்படத்தின் வரிசையில் முக்கியமான படமாக மாயா பஜார் அங்கீகரிக்கப்பட்டது. ராம்கி, ஊர்வசி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள், தமிழ் சினிமா வாழ்க்கையில் ராம்கிக்கு இது முக்கியமான வெற்றி படமாக அமைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்