டாட்டா பாய் பாய், பொட்டி படுக்கையோடு கிளம்பிய சூர்யா.. 19 வருஷத்துக்கு பின்னும் செல்லுபடியாகாத கூட்டணி

பிதாமகன் படத்திற்கு பிறகு 19 வருடங்கள் கழித்து இயக்குனர் பாலா-சூர்யாவின் கூட்டணியில் உருவாகும் படம் வணங்கான். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வணங்கான் படம் துவங்கப்பட்டதிலிருந்தே ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது.

அடித்தட்டு மக்களின் பிரச்சனையை இந்தப் படத்தில் காண்பிக்க வேண்டும் என நினைத்து உருவாக்கும் இயக்குனர் பாலாவிற்கு இன்னமும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் பிடிபடவில்லை. இதனால் வணங்கான் படத்தின் கிளைமாக்ஸ் ரெடி பண்ணாமல் ஏதேதோ எடுத்துக் கொண்டிருக்கிறார் பாலா.

Also Read: தெளிவான மனநிலையில் இல்லாத பாலா

வணங்கான் படத்தில் இன்னும் ஒரு தெளிவான முடிவில் பாலா இல்லையாம். ஏனென்றால் இந்தப் படத்தின் கதையை அவர் வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்கிறாராம். இதனால் தற்போது நிறைய குழப்பம் நிலவி வருகிறது. படம் துவங்குவதற்கு முன்பே கதை தயாராக இருக்கவேண்டும்.

ஆனால் வணங்கான் படத்திற்கான கதையை பாலா இன்னும் முழுசா தயார் செய்யாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார். ஆகையால் இது ஒத்துவராது என வணங்கான் படத்தை விட்டுவிட்டு சிறுத்தை சிவா படத்தில் நடிக்க சூர்யா கிளம்பி விட்டார்.

Also Read: அண்ணாத்த ஸ்டைல் படம்தான் சூர்யா, சிவா இணையும் படம்

அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்குகிறது. ஒரு படத்தின் கதை முழுவதுமாக தயாராகவில்லை என்றால், அந்த படம் கிடப்பில் தான் போடணும். தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்க இருப்பதார்.

ஆனால் வணங்கான் படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்திற்கு செல்லலாம் என நினைத்தார். இப்போது வணங்கான் படத்தின் கதை தயாராக இல்லாததாலும் வாடிவாசல் படத்திற்கு முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் இந்த சமயம் சிறுத்தை சிவா படத்தை முடித்துவிடலாம் என சூர்யா பாலாவிற்கு டாட்டா காண்பித்து சென்றுவிட்டார்.

Also Read: வாடிவாசல் ஷூட்டிங் ஒத்திவைப்பு.. வெற்றிமாறனின் லூட்டி

மரண மாஸாக வணங்கான் படத்தின் போஸ்டர் வெளிவந்தாலும் படபிடிப்பின் நிலைமை இதுதான். இன்னும் பாலாவால் என்னென்ன நடக்கபோகிறதோ. எது நடந்தாலும் படம் வெளிவந்தால் எல்லாத்தையும் மறந்துதான் விடுவார்கள். ஏன் என்றால் இது பாலா படம்.

வணங்கான் படத்தின் வைரலான போஸ்டர்

vanangaan-movie-poster-cinemapettai
vanangaan-movie-poster

Also Read: ஹனிமூனில் படு கிளாமராக நயன்தாரா

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -