ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அண்ணாத்த ஸ்டைல் படம்தான் சூர்யா, சிவா இணையும் படமாம்.. ஆனா ஒரே ஒரு சின்ன மாற்றம்

நடிகர் சூர்யாவின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இது சூர்யாவின் 39வது படம் என்பதால் சூர்யா-39 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அஜித் மற்றும் ரஜினியை இயக்கிய இயக்குனருடன் சூர்யா இப்போது தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யா தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான் ‘ என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பின்னர் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும், ஞானவேல் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் . இந்நிலையில் தற்போது சூர்யா கைகோர்த்துள்ள இயக்குனரின் படத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சியான அப்டேட்டாக தெரியவில்லை.

பின்னர் ரஜினியின் ‘அண்ணாத்தே ‘ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் ரஜினியின் கேரியரில் ஒரு சொதப்பல் படமாகவே அமைந்துவிட்டது. சிறுத்தை சிவாவின் அடுத்தடுத்த படங்கள் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. இந்நிலையில் சூர்யா-சிறுத்தை சிவா கூடையில் புதிய படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் சூர்யாக்கு இரட்டை வேடம் எனவும், அப்பா-மகன் செண்டிமெண்ட் கதை எனவும் தகவல்கள் வெளியாவது, சிறுத்தை சிவாவின் பழைய படங்களை தூசி தட்டினார் போல் படம் அமைய வாய்ப்புகள் உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக க்யாரா அத்வானி நடிக்க உள்ளார்.

இந்த படமும் அண்ணாத்த ஸ்டைலில் தான் இருக்குமாம். ஆனால் ஒரு சின்ன மாற்றம் அதில் அண்ணன் தங்கை, இதில் அப்பா மகன் செண்டிமெண்ட் படமாம். அதிரடி ஆக்ஷனும் உண்டாம். இதை கேட்டு சூர்யா ரசிகர்கள் சற்று பயத்தில்தான் உள்ளனர்.

ஆஸ்கார் அகாடெமியில் சூர்யாவுக்கான அழைப்பு, தேசிய விருது என சூர்யாவின் வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு, சூர்யா-சிவா கூட்டணி அவ்வளவு பிடித்தமானதாக இல்லை என சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிகிறது.

- Advertisement -

Trending News