14 வருடத்திற்கு பின் மீண்டும் ஸ்விம்மிங் சூட்டில் நயன்தாரா?. ஒரு முடிவுடன் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

தென்னிந்திய திரை உலகின் டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். இந்தப் படத்தை தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லி இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Also Read: பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடியாக நடிக்க யோசிக்கும் நடிகை.. நயன்தாரா கூட இவ்வளவு பில்டப் காட்டல

இப்படத்தை வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியான நிலையில், ஷூட்டிங் இன்னும் முடியாததால் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஆகையால் படத்தை விரைவில் முடித்து வரும் அக்டோபர் மாதத்திற்குள் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் மற்றொரு ஹாட் ஆன அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 14 வருடத்திற்கு பின் ஸ்விம்மிங் உடை அணிந்து நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. பாலிவுட் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் இடம்பெறுவது சகஜம் என்றாலும், அஜித்தின் பில்லா மற்றும் விஜய்யின் வில்லு போன்ற படத்தில் ஸ்விம்மிங் சூட்டில் இளசுகளை திணறடித்த நயன் இப்போது ஜவான் படத்திலும் அப்படி நடித்திருக்கிறாராம்.

Also Read: உறைய வைக்கும் பனியிலும் உழைத்த டெக்னீசியன்கள்.. வீடியோ வெளியிட்டு மரியாதை செய்த லியோ டீம்

கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய படங்களில் குடும்ப குத்து விளக்காகவே வலம் வந்த நயன்தாரா,திருமணத்திற்கு பிறகு அவருக்குள் இப்படி ஒரு மாற்றமா! என இந்த விஷயத்தை தெரிந்த பலரும் வாயடைத்து போய் உள்ளனர்.

ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் வேற இருப்பதால் நயன்தாராவின் மார்க்கெட் படுத்துவிட்டதால், அதையெல்லாம் தட்டித்தூக்க வேண்டும் என்ற முடிவுடன் கவர்ச்சி பக்கம் திரும்பி உள்ளார். இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது படம் ரிலீசானால் தெரிந்து விடும்.

Also Read: பழசை மறந்த விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஆறுதல் சொல்லி போட்ட பதிவு

Sharing Is Caring:

அதிகம் படித்தவை