சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாரிசு நடிகையாக இருந்தாலும் விட மாட்டாங்க!. அஜித் பட இயக்குனரின் மகள் கூறிய அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை

Adjustment Problem: சினிமாவை பொருத்தவரையில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருப்பதை இப்போது பிரபலங்கள் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளுக்கு எந்த மாதிரி பிரச்சனைகள் வருகிறது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

புதிதாக வரும் நடிகைகளுக்கு தான் இப்படி நடக்கிறது என்று பார்த்தால் வாரிசு நடிகைகளுக்கும் இதே நிலைமைதான். இது குறித்து அஜித் பட இயக்குனரின் மகள் ஒருவர் வெளிப்படையாக பேசி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் தானே அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

Also Read : தப்பு செஞ்சவருக்கு வீடு வாங்கி கொடுத்து அழகு பார்த்த அஜித்.. நம்பி வந்தா நான் தான் உனக்கு கடவுள்

அதாவது மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். அகத்தியன் அஜித்தின் நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக அஜித்துக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த காதல் கோட்டை படத்தின் இயக்குனரும் இவர்தான். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

அதில் இரண்டாவது மகளாக உள்ளவர் தான் நடிகை விஜயலட்சுமி. படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரை தொடரிலும் நடித்தார். அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பிரபல நிகிழ்ச்சியான பிக் பாஸில் கலந்து கொண்டார். இதில் கடைசி வரை பயணித்தாலும் டைட்டில் பட்டம் கிடைக்கவில்லை.

Also Read : எல்லாம் பத்தினிவிட்ட சாபம் தானா! அஜித்தை தவறாக வழி நடத்துகிறார்களா.? ஆட்டிப் படைக்கும் கெட்ட நேரம்

ஆனால் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி டைட்டிலை அடித்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜயலட்சுமி பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று கூறியிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் என்னையுமே அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார்கள். நான் மறுப்பு தெரிவித்ததால் அந்த பட வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்று விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இதுபோன்று திறமை இருந்தும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையால் நிறைய நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார்கள்.

Also Read : லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

- Advertisement -

Trending News