சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஹீரோயினா, சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்டா.? மாவீரனில் இருந்த இடம் தெரியாமல் போன அதிதி சங்கர்

Actress Aditi Shankar: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மாவீரன் வசூலிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது. மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவருடன் இணைந்து சரிதா, யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படி மெகா கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதியின் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதாவது மாவீரனில் அவர் ஹீரோயினா அல்லது சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டா என்று கேட்கும் வகையில் அவருடைய கேரக்டர் அமைந்திருக்கிறது.

Also read: வசூல் வேட்டையாடும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் 2-ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

எப்படி என்றால் படத்தின் முதல் பாதியில் இவர் அங்கங்கு வந்து செல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதிலும் ஒரு சில காட்சிகளை தவிர பெரிய அளவில் இவருக்கு நடிப்பதற்கு ஒன்றும் வாய்ப்பு இல்லை. அப்படி கிடைத்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

சிவகார்த்திகேயனின் தங்கை, அம்மா கதாபாத்திரத்திற்கு இருந்த முக்கியத்துவம் கூட அதிதி கேரக்டருக்கு இல்லை. அவர் வரும் ஒரு சில காட்சிகளிலும் பெரிய அளவில் அவருடைய நடிப்பு மனதில் நிற்கவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் நடிப்பில் இன்னும் அவர் தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

Also read: மாவீரனை தூக்கி நிறுத்திய விஜய் சேதுபதி.. குரல் கொடுத்ததற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.!

இவர் திரையுலகுக்கு வந்த போது வாரிசு நடிகை என்ற அடையாளம் தான் இவருக்கு வாய்ப்பை கொடுக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில் தான் மாவீரனில் அவருடைய நடிப்பு இருந்தது. சங்கர் மகள் என்ற காரணத்தினால் தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததோ என்று கூட நினைக்க வைக்கிறது.

அதன் காரணமாகவே தற்போது அதிதி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இனிவரும் படங்களிலாவது இவர் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்தால் இவருக்கான வருங்காலம் சிறப்பாகவே இருக்கும்.

Also read: மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியா, தோல்வியா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

- Advertisement -

Trending News