ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா உருவாகியுள்ள இந்த படம் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவல் ஆகும்.

இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரில் வரும் ஜூன்16ம் தேதி படம் வெளியாகுவதாகவும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோஷன் கேப்சர், 3டி தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஆதிபுருஷ் உருவாகியுள்ளது.

Also Read: 84 ஏக்கரில் பிரபாஸின் பண்ணை வீடு.. வாயை பிளக்க வைக்கும் மொத்த சொத்து மதிப்பு

தற்போது வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் ட்ரைலரில் அனுமன், ராமனின் கதையை சொல்வது போல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள் ராமரின் கதை தன் ஆதி புருஷ். அறம் மற்றும் தர்மம் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டமாய் திகழ்ந்த ராமரின் கதை.

தர்மத்தால் அதர்மத்தில் அகங்காரத்தை அழித்த ராமரைப் பற்றிய கதை. யுக யுகங்களாக நம்முடைய உணர்வோடும் உள்ளத்தோடும் ராமாயணத்தின் கதைதான் இந்த படம். இதில் ராவணன் சீதாவிடம் பிச்சை கேட்பது போல் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வதும், அதன் பிறகு சீதாவை அனுமன் சந்திப்பதில் பிறகு ராவணனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தையும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டலாக காண்பித்துள்ளனர்.

Also Read: பயத்தில் அட்லீக்கு கண்டிஷன் போட்ட ஷாருக்கான்.. யாருடனும் போட்டி போட விரும்பல

இதில் ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமர் தனது உயிரை விட அறவாழ்க்கை தான் முக்கியம் என போராடுகிறார். பல இடங்களில் ட்ரெய்லரை பார்க்கும் போதே சிலர்ப்பூட்டுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

மேலும் இந்த படம் பாகுபலி2 படத்தை போல் பிரபாஸுக்கு கை கொடுக்குமா என்றும் 1000 கோடி வசூலை வாரிக் குவிக்குமா என்பதுதான் தற்போது இந்திய திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆதிபுருஷ் ட்ரெய்லர் இதோ!

Also Read: பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்தும் மண்ணை கவ்விய பூஜா ஹெக்டே.. அடி மேல அடி வாங்கிய 4 பிளாப் படங்கள்

Next Story

- Advertisement -