கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க.. ஆதிபுருஷ் வசூலால் ஆட்டம் கண்ட பிரபாஸின் ஆணிவேர்

Adipurush: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் ஆதி புருஷ். ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்களை தான் பெற்றது.

ஏனென்றால் இப்படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லர் அனைத்தும் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அதனாலேயே பட குழு பல வகைகளிலும் ப்ரமோஷனை மேற்கொண்டது. அதில் ராமருக்கு ஒரு சீட் தியேட்டரில் ஒதுக்கப்படும் என வந்த அறிவிப்பு தான் பல ட்ரோல்களுக்கு வழிவகுத்தது.

Also read: ஆதிபுருஷ் 2ம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கா.. பிரபாஸின் பதில் என்ன தெரியுமா?

அதைத்தொடர்ந்து படம் வெளியான நிலையில் படக்குழுவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் குவிந்தது. அதிலும் ராமாயண காவியத்தை இவ்வளவு மோசமாக யாராலும் எடுக்க முடியாது என்னும் வகையில் கண்டனங்கள் எழுந்தது. அதனாலேயே படத்திற்கான வசூலும் மந்தமானது.

ஆனாலும் பட குழு நாங்கள் இவ்வளவு வசூல் பெற்று விட்டோம், அவ்வளவு வசூல் வந்தது என நாளுக்கு ஒரு அறிவிப்பை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது இப்படம் 450 கோடிக்கு மேல் வசூலித்து விட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் உண்மையில் 400 கோடியை கூட தொடவில்லையாம்.

Also read: ஹாட்ரிக் தோல்வி அதல பாதாளத்திற்கு வந்த ஆதிபுருஷ் வசூல்.. முதலுக்கே மோசம் போச்சே என தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் படக்குழு இப்படி சுய தம்பட்டம் அடித்து வருகின்றனர். இதன் மூலம் பான் இந்தியா படமான ஆதிபுருஷ் நஷ்டம் அடையவில்லை என்றும் பட குழு மார்தட்டி கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அதை நம்புவதற்கு தான் ஆள் இல்லை. அந்த வகையில் இந்த படம் பாகுபலி நாயகனுக்கு ஒரு பெரும் அடியை கொடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பிரம்மாண்ட படத்தில் தான் நடிப்பேன் என்று கங்கணம் கட்டி வந்த அவரின் ஆணிவேர் இப்போது ஆட்டம் கண்டுள்ளதால் அடுத்த அடியை கவனமாக எடுத்து வைக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம். அந்த வகையில் தற்போது அவர் கமல் கூட்டணியில் இணைந்திருக்கும் ப்ராஜெக்ட் கே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் நினைத்ததை சாதிக்கவும் பிரபாஸ் திட்டமிட்டு இருக்கிறார்.

Also read: ராமாயண காவியத்தின் புனிதத்தை கெடுத்த ஆதிபுருஷ்.. படத்தை தடை செய்ய வலுக்கும் கோரிக்கை

Next Story

- Advertisement -