குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி நடிப்பது தான் இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைகிறது. தற்போது மறுபடியும் இந்த நாடகம் பழைய மாதிரி சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. குணசேகரன் சொத்துக்காக மட்டுமே எல்லா தில்லாலங்கடி வேலையை செய்து வந்த விஷயம் தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்து விட்டது. அதனால் குணசேகரனை பார்த்து ஆதிரை, மண்டபத்தில் செய்தது எல்லாம் டிராமாவா அப்பத்தாவின் சொத்தை வாங்குவதற்கு தான் என்னை பகடைக்காயாக யூஸ் பண்ணிட்டீங்களா என்று கேட்கிறார்.

அதுவே இந்த மக்கு ஆதிரைக்கு இப்பதான் புரிந்திருக்கிறது. இந்த மாதிரி எல்லாம் நடந்திடக் கூடாது என்பதற்காக தான் அப்பத்தா பிடிவாதமாக இருந்தார். ஆனால் எதையுமே யோசிக்காத விசாலாட்சியும் ஆதரையும் அப்பத்தாவை என்னெல்லாம் பேசினாங்க. இப்போது இவங்க எல்லாம் மூலையில் உட்கார்ந்து அழ வேண்டியது தான். பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவாங்க யாராயிருந்தாலும் அவர்களுக்கு சொல் புத்தி வேணும் அப்படி இல்லையென்றால் தன் புத்தி வேணும் ரெண்டுமே இல்லன்னா இப்படித்தான் அனுபவிக்க வேண்டும்.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

ஆனாலும் எதற்கும் அசராத குணசேகரன் தங்கச்சியும் இல்ல ஒன்றும் இல்லை எனக்கு சொத்து தான் முக்கியம் நான் கஷ்டப்பட்ட சம்பாதித்தது என்று மிகத் திமிராக பேசுகிறார். இதற்கு இடையில் அரசு, குணசேகரனால் இப்படி முட்டாளாக ஆகிவிட்டோம் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஜனனி ஈஸ்வரியை பார்த்து இவ்ளோ நாள் குணசேகரனால் ரொம்பவே கஷ்டத்தை அனுபவித்திருப்பீர்கள் அதற்கெல்லாம் தீர்வாக நான் எடுக்கப் போகிற முடிவை நீங்க வேடிக்கை பாருங்கள் என்று வீரமாக பேசுகிறார்.

இவர் சொல்றது இருக்கட்டும் ஆனால் அப்பத்தா இப்படி ஆயிட்டாங்க என்று குணசேகரன் மேல் வெறியோடு இருக்கும் ஜனனி ஏதாவது பண்ணி குணசேகரன் இடமிருந்து அந்த சொத்து போகாதபடி கண்டிப்பாக தடுத்து நிறுத்துவார். அதற்காகவே அப்பத்தா இவரிடம் சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்று கண்டுபிடிக்க முயற்சியில் இறங்குவார். அவர் வந்தால் குணசேகரனுக்கு சரியான ஆப்பாக இருக்கும்.

Also read: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

ஏனென்றால் இவரிடம் தான் ஏற்கனவே அப்பத்தாவின் 40% சொத்தை அனைத்தையும் உயிலாக எழுதிக் கொடுத்திருப்பார். அதனால் இந்த சொத்து குணசேகரனிடம் போகாதபடி அமையும். அடுத்ததாக அப்பத்தாவின் மருத்துவமனை செலவுக்காக ஜனனி என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவியாக கௌதம் என்ட்ரி கொடுக்கப் போகிறார். இவர்தான் ஜனனிக்கு உதவி செய்து அப்பத்தாவின் மருத்துவ செலவை பார்க்கப் போகிறார்.

ஆனால் இதை சக்தி எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியவில்லை. ஏனென்றால் ஏற்கனவே கௌதம் மேல் இருந்த கடுப்பில் தான் ஜனனிடம் பெரிய பிரச்சினையை செய்தார். இப்பொழுது மறுபடியும் கெளதம் ஜனனிக்கு உதவி செய்தால் அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறான் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும் இப்பொழுது ஜனனியே முழுமையாக புரிந்து கொண்டதால் அவருக்கு பக்கபலமாக தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 2வது திருமணம்.. பாக்கியலட்சுமி பிரபலம் செய்த மானங்கெட்ட விவாகரத்து

- Advertisement -