அருந்ததி வாய்ப்பை தட்டி தூக்கிய த்ரிஷா.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படம்

Actress Trisha: நடிகை திரிஷா காட்டில் தான் இப்போது அதிர்ஷ்ட மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. முன்னணி ஹீரோக்களின் புது படங்களின் அப்டேட் வரும் போதெல்லாம் அதில் ஹீரோயின் என த்ரிஷா பெயர் தான் அடிபடுகிறது. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்பது போல் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி முன்னணி ஹீரோயின்கள் எல்லோருடைய வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார் திரிஷா.

திரிஷாவின் இந்த புது பிறவிக்கு பிள்ளையார் சுழி போட்டது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் தான். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆக தென்னிந்திய சினிமாவை கண்டுகொள்ள ஆள் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டிருந்தார் திரிஷா. மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் கொடுத்த குந்தவை கேரக்டர் மூலம் இப்போது விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விட்டார்.

விஜய் நடித்த லியோ படத்தில் அவருக்கு ஜோடி போட்டது மட்டுமில்லாமல், அஜித்தின் விடாமுயற்சி, கமலஹாசனின் தக் லைஃப், மோகன்லால் கூட ராம் என தென்னிந்திய சினிமாவை மொத்தமாக ஆட்கொண்டு விட்டார் இந்த அழகு தேவதை. இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்ததோடு மட்டுமில்லாமல் அழகிலும் மெருகேறி விட்டார் திரிஷா. தமிழ் மற்றும் மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Also Read:கல்யாணம் ஆனாலும் மவுஸ் குறையாமல் சுற்றும் நயன்தாரா.. திரிஷாவை ஓரங்கட்ட கமிட்டான 6 படங்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வாம்பரா படத்தில் திரிஷா ஜோடி சேர்ந்திருப்பது இதற்கு முன்னமே வெளிவந்த செய்தி தான். கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா இந்த படத்தின் மூலம் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் கீர்த்தி செட்டி, பூஜா ஹெக்டே போன்றவர்கள் வளர்ந்து வந்து கொண்டிருக்கும்போதே த்ரிஷா உள்ளே புகுந்து அவர்களுக்கு ஆட்டம் காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பெரிய நடிகையின் இடத்தை தட்டி தூக்கிய திரிஷா

த்ரிஷா இந்த படத்தில் நடிக்கிறார் என்பது முன்பே தெரிந்த விஷயம்தான், ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்த நடிகை யார் என்ற விஷயம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர இருந்த நடிகை அனுஷ்கா தானாம். இப்போது த்ரிஷா தான் சினிமா ரசிகர்களின் மனதில் ட்ரெண்டாகிக் கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பு அப்படியே த்ரிஷாவுக்கு கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஆஸ்தான ஹீரோயினாக இருந்த நயன்தாராவை திரிஷா ஓரம் கட்டி விட்டார். இப்போது தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் அனுஷ்காவின் வாய்ப்பையும் தட்டிப் பறித்து இருக்கிறார். இப்படி முன்னணி ஹீரோயின் களின் வாய்ப்பு எல்லாம் த்ரிஷாவை தேடி வருவதால் இனி தென்னிந்திய சினிமாவில் அவருக்கு ரூட் கிளியர் ஆகி, மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவார்.

Also Read:பெண்கள் கதையை வைத்து மாஸ் காட்டிய 5 படங்கள்.. நயன்தாராவுக்கு முன்னரே கொடி கட்டி பறந்த ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்