கல்யாணம் ஆனாலும் மவுஸ் குறையாமல் சுற்றும் நயன்தாரா.. திரிஷாவை ஓரங்கட்ட கமிட்டான 6 படங்கள்

Nayanthara Upcoming Movies: ஹீரோயின்கள் பொருத்தவரை கல்யாணம் ஆகிவிட்டாலே அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்துவிடும். பட வாய்ப்புகளும் குறைந்து, ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் அளவிற்கு போய்விடுவார்கள். இன்னும் சில பேர் குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகி விடுவார்கள். அதன் பின் ஏதாவது கெஸ்ட் ரோல் மற்றும் சின்னத்திரையில் நுழைந்து விடுவார்கள்.

ஆனால் இவர்களுக்கெல்லாம் மத்தியில் நயன்தாரா கல்யாணத்திற்கு பிறகும் வரிசை கட்டி நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கு இடையில் அவ்வப்போது அவருடைய இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கல்யாணம் ஆனாலும் என்னுடைய மவுசு குறையாது என்று கெத்தாக வருகிறார்.

இன்னும் சொல்லப் போனால் நயன்தாராவுக்கு போட்டியாக இருக்கும் த்ரிஷாவை ஓரங்கட்டும் அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நயன்தாரா, மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிப்பில் டெஸ்ட் படம் உருவாகி வருகிறது.

Also read: பெண்கள் கதையை வைத்து மாஸ் காட்டிய 5 படங்கள்.. நயன்தாராவுக்கு முன்னரே கொடி கட்டி பறந்த ஹீரோயின்

அடுத்ததாக யூடியூபர் டியூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிக்கும் ‘மன்னாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இதனை அடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாராவின் 81 வது படத்தை கமிட் ஆகியிருக்கிறார்.

மேலும் தனி ஒருவன் இரண்டாம் பாகம் மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கப் போகிறார். அடுத்ததாக மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் இவருடைய மவுசு அதிகரித்து விட்டது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நடித்த முதல் படமே 1000கோடி அளவிற்கு வசூலை வாரிக் குவித்து விட்டது. இதனால் பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் சிலர் நயன்தாராவின் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: நயன்தாரா மார்க்கெட்டை உடைத்து த்ரிஷா கையில் மாட்டிய 5 மெகா பட்ஜெட் படங்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்